பாரிஸ் ஒலிம்பிக்கிற்கு இந்திய குத்துச்சண்டை வீரர் அமித் பன்கால் தகுதி பெற்றுள்ளார். தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில், உலக குத்துச்சண்டை தகுதிச்சுற்றுத் தொடர் நடைபெற்று வருகிறது.
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் ஒலிம்பிக் போட்டிகள் ஜூலை 26 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதற்கான தகுதி சுற்று போட்டிகள் தற்போது நடத்தப்படுகிறது.
இதில் ஆடவருக்கான 71 கிலோ எடைப்பிரிவில் நிஷாந்த் தேவ் வெற்றி பெற்று ஏற்கனவே பாரிஸ் ஒலிம்பிக் தொடருக்கு தேர்வாகினார். இதனை தொடர்ந்து ஆடவருக்கான 51 கிலோ எடைப்பிரிவில் காலிறுதிச் சுற்றில் இந்தியாவின் அமித் பன்கால் மற்றும் சீனாவின் சுவாங் லியூ ஆகியோர் மோதினர்.
இதில் 5-0 என்ற புள்ளிக்கணக்கில் அமித் பன்கால் வெற்றி பெற்றார். மேலும் பாரிஸ் ஒலிம்பிக்கிற்கான தனது தகுதியையும் உறுதி செய்தார்.
இதனால் பாரிஸ் ஒலிம்பிக்கிற்கு குத்துச்சண்டை பிரிவில் இந்தியாவில் இருந்து லவ்லினா, ப்ரீத்தி பவார், நிகாத் ஜரீன், நிஷாந்த் தேவ் மற்றும் அமித் பன்கால் ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர்.
.
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)