• Login
Thursday, March 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

ஒலிம்பிக்கில் பங்கேற்கும் ஆந்திர மாநில வீராங்கனை… தேடிச்சென்று உதவிய ரிலையன்ஸ் அறக்கட்டளை

GenevaTimes by GenevaTimes
June 27, 2024
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
ஒலிம்பிக்கில் பங்கேற்கும் ஆந்திர மாநில வீராங்கனை… தேடிச்சென்று உதவிய ரிலையன்ஸ் அறக்கட்டளை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


நீடா அம்பானியின் ரிலையன்ஸ் அறக்கட்டளையின் உதவியால் ஆந்திராவை சேர்ந்த சிறுமி ஒருவர் ஒலிம்பிக் போட்டியில் தடகள பிரிவில் பங்கேற்கவுள்ளார். திறமை மிக்கவர்களை கண்டறிந்து அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்கி வரும் ரிலையன்ஸ் அறக்கட்டளைக்கு பாராட்டுகள் குவிகின்றன.

ஆந்திர மாநிலம்விசாகப்பட்டினம் நகரின் கைலாசபுரம் தெருவில் வசிப்பவர் 24 வயதான யர்ராஜி ஜோதி. இவரது அப்பா சூர்ய நாராயணா, அம்மா குமாரி,  ஆகியோர் கூலி தொழிலாளியாக உள்ளனர். ஜோதியின் அண்ணன் சுரேஷ் விசாக பட்டின துறைமுகத்தில் அவுட்சோர்ஸிங் ஊழியராக இருந்து வருகிறார்.

விளம்பரம்

ஜோதி தனது குடும்பத்தினருடன் மிகச் சிறிய வீட்டில் வசிக்கிறார். ஆனால் அவரது கனவு என்பது மிகவும் பெரியது. ஜோதி சிறுவயதிலிருந்தே விளையாட்டுகளில், குறிப்பாக ஓட்ட போட்டிகளில் ஆர்வமுடன் கலந்து கொண்டார். அவரது ஆசிரியர்களும் பள்ளிக் கூடங்களில் ஜோதியை ஊக்கப்படுத்தப்பட்டனர். ஜோதி பத்தாம் வகுப்புக்கு முன்பே பல பதக்கங்களை வென்றுள்ளார்.

பள்ளிப் படிப்பிற்குப் பிறகு, ஜோதி தனது விளையாட்டு வாழ்க்கையில் அதிக கவனம் செலுத்தினார். சில நன்கொடையாளர்களின் உதவியுடன், அவர் ஹைதராபாத்திற்கு சென்று பயிற்சியாளர்களின் வழிகாட்டுதலின் கீழ் தனது பயிற்சியை தீவிரப்படுத்தினார்.

விளம்பரம்

ஆரம்பத்தில் ஜோதியின் திறமையைக் கண்டு பயிற்சியாளர்கள் ஆச்சரியப்பட்டனர். அதிக பயிற்சி அளிக்கப்பட்டு, மாவட்ட, மாநில அளவிலான போட்டிகளில் விளையாடி அவர் வெற்றி பெற்றார்.

ஐதராபாத் ஸ்போர்ட்ஸ் ஹாஸ்டலில் சேர்ந்து ஜோதி ஓட்டத்தில் அதிக பயிற்சி செய்தார். ஜோதி தற்போது ரிலையன்ஸ் அறக்கட்டளையின் உதவியோடு, ஊக்கத்துடன் முன்னேறி வருகிறார். ரிலையன்ஸ் அறக்கட்டளையின் நிறுவனரும் தலைவருமான நீதா அம்பானி ஜோதிக்கு தொடர்ந்து ஆதரவை வழங்கி வருகிறார்.

இதையும் படிங்க – அரியானா டூ பாரிஸ் ஒலிம்பிக்… மல்யுத்த வீராங்கனைக்கு உதவிக்கரம் நீட்டிய ரிலையன்ஸ் அறக்கட்டளை

விளம்பரம்

ரிலையன்ஸ் அறக்கட்டளை உதவியுடன் வாழ்வில் ஜோதி முன்னேறி வருவது அவரது குடும்பத்தினர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து ஜோதியின் அண்ணன் சுரேஷ் கூறுகையில், விளையாட்டு பற்றிய விழிப்புணர்வு இல்லாததாலும், சரியான உணவு கூட கிடைக்காததாலும், முறையான பயிற்சி அளிக்க முடியவில்லை. தொடக்கத்தில், அவரது திறமையை அவரது பள்ளி ஆசிரியர்கள் அங்கீகரித்துள்ளனர். ஜோதி தேசிய அளவில் பதக்கம் வென்றதையடுத்து, விளையாட்டில் அவரது திறமை பற்றி அனைவருக்கும் தெரிய வந்தது என்று தெரிவித்தார்.

ஜோதி தற்போது அரியானாவின் பஞ்ச்குலாவில் மாநிலங்களுக்கு இடையேயான போட்டியில் கலந்து கொண்டு ஜூலை 26, 2024 முதல் பாரிஸில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகி வருகிறார்.

விளம்பரம்

.

Read More

Previous Post

ADMK vs DMK: ’சட்டப்பேரவையில் என்னை அனுமதித்து இருந்தால் கிழி கிழி என கிழித்து இருப்பேன்!’ ஈபிஎஸ் ஆவேசம்!

Next Post

தவறினால் அபராதம்… நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை!!! – News18 தமிழ்

Next Post
தவறினால் அபராதம்… நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை!!! – News18 தமிழ்

தவறினால் அபராதம்… நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை!!! – News18 தமிழ்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin