• Login
Friday, March 27, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

ஒலிம்பிக்கில் களம் காணும் கூலித் தொழிலாளியின் மகன்… முயற்சியால் வென்ற சந்தீப் சிங்…

GenevaTimes by GenevaTimes
July 2, 2024
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
ஒலிம்பிக்கில் களம் காணும் கூலித் தொழிலாளியின் மகன்… முயற்சியால் வென்ற சந்தீப் சிங்…
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கூலித் தொழிலாளியின் மகனாக பிறந்து ராணுவத்தில் பணியாற்றும் சந்தீப் சிங் பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியா சார்பாக விளையாடவுள்ளார். முயற்சியால் உச்சம் தொட காத்திருக்கும் அவரது வாழ்க்கை சம்பவம் இணையத்தில் அதிகம் படிக்கப்பட்டுள்ளது.

ஒலிம்பிக்கில் தங்கம் வாங்குவதுதான் பெரும்பாலான தடகள வீரர்களின் உச்சபட்ச ஆசையாக இருக்க முடியும். அதற்காக அவர்கள் செய்யும் தியாகங்கள் பலமுறை வெளிச்சத்திற்கு வருவது கிடையாது. எளிமையான குடும்ப பின்னணியில் இருந்து வரும் பல விளையாட்டு வீரர்கள் சர்வதேச அரங்கில் இந்தியாவுக்கு பெருமை தேடிக் கொடுக்கின்றனர்.

விளம்பரம்

அந்த வகையில் கூலித் தொழிலாளியின் மகனாக பிறந்த பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்க விருக்கும் பஞ்சாபை சேர்ந்த சந்தீப் சிங் இந்தியாவுக்காக பதக்கம் வெல்ல தயாராகியுள்ளார்.

பஞ்சாப் மாநிலம் பரித்கோட்டை சேர்ந்த சந்தீப்சிங், தற்போது நைப் சுபேதார் தரத்தில் இந்திய ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். 10 மீட்டர் தூர துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியா சார்பாக ஒலிம்பிக்கில் பங்கேற்கவிருப்பவர் இவர்தான்.

ராணுவத்தில் சேர்வதற்கு முன்பாக இவரத தந்தைதான் குடும்ப பொறுப்புகளை கவனித்து வந்துள்ளார். சந்தீப் ராணுவத்தில் இணைந்த பின்னர் அவர் பெற்ற வருமானம் குடும்பத்திற்கு உதவியாக இருந்துள்ளது. இருப்பினும், 2019 ஆம் ஆண்டு போதைப் பொருளை பயன்படுத்திய குற்றச்சாட்டின்பேரில் அவர் ராணுவத்திலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

விளம்பரம்

பின்னர் 2021 இல் மீண்டும் பணிக்கு சேர்த்துக் கொள்ளப்பட்ட அவரை இந்திய ராணுவம் சியாச்சின் பனி பிரதேசத்தில் பணியாற்ற உத்தரவிட்டது. தற்போது அவர் உத்தரப்பிரதேச மாநிலம் பதேகரில் பணியாற்றுகிறார்.

இதையும் படிங்க – சோகத்தின் உச்சத்தில் SA வீரர்கள்.. இந்திய ரசிகர்களின் செயலால் நெகிழ்ச்சி – வீடியோ

2023 ஆம் ஆண்டு துப்பாக்கி சுடுவதற்காக 2 முறை அவருக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டன. இதில் சிறப்பாக திறமையை வெளிப்படுத்திய சந்தீப் சிங் தங்க பதக்கத்தை வென்றார். அதன்பின்னர், 2023 தேசிய விளையாட்டு போட்டியில் வெள்ளி பதக்கம் கிடைத்தது. அதன்பின்னர் சில முக்கிய போட்டிகளில் தேர்வுக்குழுவின் கவனத்தை பெற்ற சந்தீப் சிங்கிற்கு தற்போது பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது.

விளம்பரம்

பின்புலம் எளிமையாக இருந்தாலும் தனக்கு கிடைத்த வாய்ப்பு மற்றும் தனது திறமைகளை சிறப்பாக பயன்படுத்தியதன் மூலம் சர்வதேச அரங்கில் இந்தியாவுக்காக பதக்கம் வெல்ல காத்திருக்கிறார் சந்தீப் சிங்.

.

Read More

Previous Post

Anbumani Ramadoss: 69% இட ஒதுக்கீட்டை பாதுகாப்பதற்காவது சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்!-anbumani ramadoss urges caste wise census should be conducted to secure 69 reservation

Next Post

பிறந்த குழந்தையின் பெயரில் SIP செய்தால் 20 ஆண்டுகளில் எவ்வளவு கிடைக்கும்?

Next Post
பிறந்த குழந்தையின் பெயரில் SIP செய்தால் 20 ஆண்டுகளில் எவ்வளவு கிடைக்கும்?

பிறந்த குழந்தையின் பெயரில் SIP செய்தால் 20 ஆண்டுகளில் எவ்வளவு கிடைக்கும்?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin