விதிஷா (மத்தியப் பிரதேசம்), நேபாள வெள்ளத்தில் காணாமல் போன பெண்ணுக்காக மத்தியப் பிரதேசக் குடும்பம் பதற்றத்துடனும், சிறு நம்பிக்கையுடனும் காத்திருக்கிறது.
ஈஷா அறக்கட்டளை
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நேபாள-திபெத் எல்லைப் பகுதியில் அந்த பெண்ணின் செல்போனுக்கு அழைக்கும் போதெல்லாம், அழைப்புகள் பதிலின்றி நின்று விடுகிறது. 50 வயதான சுவாதி பக்ரேச்சாவின் குடும்பத்தினர் மிகுந்த பதற்றத்துடனும், அதே சமயம் ஒரு சிறு நம்பிக்கையுடனும் காத்திருக்கின்றனர்; அவருடனான தொடர்பு துண்டிக்கப்பட்டு நான்கு நாட்கள் ஆகிவிட்டன.
டொராண்டோவைச் சேர்ந்த பொறியாளரான சுவாதி, ஆகஸ்ட் 8ம் தேதியன்று ஈஷா அறக்கட்டளையின் 77 பேர் கொண்ட குழுவுடன் கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்காக டெல்லியிலிருந்து புறப்பட்டார். நேபாளத்தில் பெரும் திடீர் வெள்ளம் ஏற்பட்ட நாளான ஆகஸ்ட் 26ம் தேதியன்று காலை 9 மணிக்குப் பிறகு அவர் தனது குடும்பத்தினருடன் எந்தத் தொடர்பும் கொள்ளவில்லை.
செல்போன் இன்னும் ஒலிக்கிறது
இந்நிலையில் செய்தியாளர்களிடம் சுவாதியின் சகோதரர் டாக்டர் பிரசாந்த் கூறுகையில், “அவரது செல்போன் இன்னும் ஒலிக்கிறது, ஆனால் அவர் எங்கள் அழைப்புகளுக்குப் பதிலளிக்கவில்லை. அவரது பாதுகாப்பு குறித்து நாங்கள் மிகவும் கவலையடைந்துள்ளோம். ஆகஸ்ட் 26ம் தேதியன்று குடியேற்ற நடைமுறைகளுக்காக சுவாதி, நேபாள-திபெத் எல்லையை அடைந்தார். அதன்பிறகு அனைத்துத் தொடர்புகளும் துண்டிக்கப்பட்டது.
சீன எல்லை
ராசுவா பகுதியில் உள்ள போட்டேகோஷி (Bhotekoshi) ஆற்றில் ஏற்பட்ட திடீர் நீர்வரத்து அதிகரிப்பை தொடர்ந்து பெருவெள்ளம் தொடங்கியது; பின்னர் வெள்ள நீர் திரிசூலி மற்றும் கண்டக் நதி அமைப்புகளில் பாய்ந்து கீழ்மட்டப் பகுதிகளையும் பாதித்தது.
அவரது செல்போன் சீன எல்லைக்கு அருகில் எங்கோ செயல்பாட்டில் இருப்பதை இருப்பிடத் தரவுகள் (location logs) காட்டினாலும், அந்த எண் டொராண்டோவில் பதிவு செய்யப்பட்டிருப்பதால் அதனை கண்டறிவது கடினமாக உள்ளது” என்று தெரிவித்தார்.



