சிங்கப்பூரில் ஒர்க் பெர்மிட் (Work Permit) வேலை அனுமதியின்கீழ் வேலைபார்க்கும் வெளிநாட்டு ஊழியர்கள் இனி நீண்ட காலம் தங்கி வேலை செய்யலாம்.
முன்னதாக, வெளிநாட்டு ஊழியர்களின் வேலை மற்றும் பிறப்பிடத்தைப் பொறுத்து, 14 முதல் 26 ஆண்டுகள் வரை தங்குவதற்கு கட்டுப்பாடு இருந்தது.
சையத் அல்வி சாலையில் 3 பேர் கைது.. தப்பித்து லாரியில் மோதிய கார் – விரட்டி பிடித்த போலீஸ்
அதாவது இந்தியா, பங்களாதேஷ், இலங்கை உள்ளிட்ட சில நாடுகளை சேர்ந்த ஒர்க் பெர்மிட் ஊழியர்கள் 14 முதல் 26 ஆண்டுகள் வரை சிங்கப்பூரில் பணிபுரியலாம்.
ஜூலை 1ஆம் தேதி முதல் அமல்
இந்நிலையில், நாளை 2025 ஜூலை 1ஆம் தேதி முதல் இந்த வரம்பு நீக்கப்படும் என்று மனிதவள அமைச்சர் டான் சீ லெங் முன்னர் அறிவித்தார்.
இந்த புதிய மாற்றம் வெளிநாட்டு வீட்டுப் பணிப்பெண்களுக்கு பொருந்தாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
வெளிநாட்டு ஊழியர்களின் ஓய்வு வயது
ஒர்க் பெர்மிட் அனுமதியில் உள்ள ஊழியர்களுக்கு ஓய்வுபெறும் வயது வரம்பு 60-லிருந்து 63 ஆக உயர்த்தப்பட உள்ளது.
இதன் படி, நிறுவனங்கள் ஒர்க் பெர்மிட் அனுமதி வைத்திருப்பவர்களை 63 வயது வரை வேலைக்கு வைத்திருக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
நல்ல திறமையான அனுபவமிக்க வெளிநாட்டு ஊழியர்களை நிறுவனங்கள் தக்கவைத்துக்கொள்ள இந்த புதிய மாற்றம் வழிவகை செய்யும் எனவும் சொல்லப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதை ஒத்து இந்த புதிய மாற்றம் அமைந்துள்ளது.
புதிய Work Permit அனுமதி விண்ணப்பங்களுக்கான வயது வரம்பு
மேலும், புதிய Work Permit அனுமதி விண்ணப்பங்களுக்கான வயது வரம்பு 61 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
முந்தைய நடைமுறையின்படி, இந்தியா உள்ளிட்ட பிற நாட்டை சேர்ந்த ஒர்க் பெர்மிட் விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பு 50 என்றும், மலேசிய விண்ணப்பதாரர்களுக்கு 58 என்ற வயது வரம்பும் உள்ளது.