சிங்கப்பூரில் வேலை செய்யும் ஒர்க் பெர்மிட் வெளிநாட்டு ஊழியர்களுக்கு செப்.1 முதல் என்னென்ன மாற்றங்கள் / நடவடிக்கைகள் என்று இந்த பதிவில் தெரிந்துகொள்வோம்.
மின்சிகரெட் பயன்படுத்துவோருக்கு எதிராக சிங்கப்பூர் கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அதில் ஒரு பகுதியாக வெளிநாட்டினர் மின்சிகரெட் பயன்படுத்தி பிடிபட்டால் அவர்களின் அனுமதி அட்டைகள் ரத்து செய்யப்படலாம் என்ற எச்சரிக்கை வெளியாகியுள்ளது.
மேலும் அவர்கள் நாடு கடத்தப்படலாம் என்றும் சிங்கப்பூருக்குள் மீண்டும் நுழைவதற்கு தடை விதிக்கப்படலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கைகள் வரும் செப்டம்பர் 1 முதல் அமலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
EP, S பாஸ் (S Pass), ஒர்க் பெர்மிட் (Work Pemrit) அனுமதி அட்டை வைத்திருக்கும் வெளிநாட்டு ஊழியர்கள் மூன்றாவது முறையாக மின்சிகரட் வைத்திருந்து பிடிபட்டால் அவர்களின் வேலை அனுமதி ரத்து செய்யப்படலாம்.
மேலும் அவர்கள் நாடு கடத்தப்படலாம், சிங்கப்பூருக்குள் அவர்கள் மீண்டும் நுழையத் தடை விதிக்கப்படலாம் என்ற எச்சரிக்கை வெளியாகியுள்ளது.
அதே போல, சிங்கப்பூரில் மின்சிகரெட் புழங்கி வெளிநாட்டு ஊழியர்கள் பிடிபட்டால் கடுமையான தண்டனைகள் விதிக்கப்படலாம் என்பதையும் மனிதவள இணையமைச்சர் தினேஷ் வாசு தாஷ் சுட்டிக்காட்டினார்.
தடுப்பூசி முழுமையாக போட்டுக்கொள்ளாத இளம் குழந்தைகள் இருக்கும் வீடுகளில் வேலை பார்க்கும் வெளிநாட்டு பணிப்பெண்களுக்கு தட்டம்மை நோய்க்கான எதிர்ப்பு சக்தி தேவை என்று MOM கூறியது.
தட்டம்மை நோய்க்கு எதிராக முழுமையாக தடுப்பூசி போடப்படாத நிலையில் ஏழு வயதுக்குட்பட்ட குழந்தை இருந்தால், அவர்களுக்காக வேலை செய்யும் பணிப்பெண்கள் தட்டம்மை நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவராக இருப்பதை முதலாளிகள் உறுதி செய்ய வேண்டும்.
இந்த புதிய கட்டாய நடைமுறை இன்று செப்.1 முதல் நடப்புக்கு வந்துள்ளது.
Photo: TODAY

