குடிநுழைவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணைய (ICA) அதிகாரியின் முன் பாலியல் செயலில் ஈடுபட்டதாக இந்திய ஆடவருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
2023ஆம் ஆண்டு நடந்த இந்த சம்பவத்தில், தன்னுடைய குறுகிய கால வருகை அனுமதியை நீட்டிக்க வேண்டி அவர் அதிகாரியின் முன் அவ்வாறு நடந்துகொண்டார் என குற்றம் சாட்டப்பட்டது.
வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதியில் அதிரடி சோதனை: 12 ஊழியர்கள் கைது – 3 பேருக்கு அபராதம்
இந்நிலையில், கடந்த செப்டம்பர் 17 அன்று கைதான பாரத் என்ற 22 வயதுமிக்க இந்திய நாட்டவருக்கு ஏழு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
பாரத் தனது குற்றத்தை நேற்று டிசம்பர் 1 ஆம் தேதி ஒப்புக்கொண்டார்.
இதில் தொடர்புடைய ICA அதிகாரியான கண்ணன் மோரிஸ் ராஜகோபால் ஜெயராம் (53) பாலியல் சலுகைகளைப் பெற்றதற்காக 2023 டிச. மாதம் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டார்.
குறுகிய கால வருகை அனுமதி விண்ணப்பங்களுக்கு பகரமாக கண்ணன் ஆறு வெளிநாட்டினரிடமிருந்து பாலியல் சலுகைகளை பெற்றார் என சொல்லப்பட்டது.
இதனை அடுத்து 2024 செப்டம்பர் 11 அன்று, கண்ணனுக்கு 22 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
வேற லெவெலுக்கு மாறவுள்ள “வெளிநாட்டு ஊழியர்களின் தங்கும் விடுதிகள்” – சிறப்பு வசதிகள் Upgrade
2023 ஜனவரி 22 அன்று பாரத், மாணவர் அனுமதிச் சீட்டின் கீழ் சிங்கப்பூருக்கு வந்தார்.
தனது நண்பருக்கு அனுமதி நீட்டிப்பு தொடர்பாக பிப்ரவரி 10 அன்று பாரத் ICA தலைமையகத்திற்குச் சென்றார், அப்போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.
பின்னர் பிப்ரவரி 18 அன்று, கண்ணனை அவரின் வீட்டில் வைத்து பாரத் சந்தித்தார், அப்போது பாலியல் தொடர்பான விஷயங்களைப் பற்றி அவர்கள் பேசத் தொடங்கினர்.
கண்ணன் பாரத்திடம் சுயஇன்பம் செய்யச் சொல்ல, அதற்கு பாரத் இணங்கினார் எனவும் கூறப்பட்டுள்ளது.
இதனை அடுத்து, 2023 செப்டம்பர் 8 அன்று, பாரத்துக்கு ஒர்க் பெர்மிட் (Work permit) அனுமதி வழங்கப்பட்டது.
பின்னர் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ், செப்டம்பர் 17 அன்று பாரத் கைது செய்யப்பட்டார்.
இறுதியாக இந்த குற்றங்கள் எவ்வாறு வெளிச்சத்திற்கு வந்தது என்பது குறித்த விவரங்கள் ஏதும் நீதிமன்ற ஆவணங்களிலும் குறிப்பிடப்படவில்லை.
வெளிநாட்டு ஊழியர்களை போற்றும் “சர்வதேச குடியேறிகள் தினம்” – சிங்கப்பூரில் 300 ஊழியர்கள் பங்கேற்பு

