சிங்கப்பூரில், ஒர்க் பெர்மிட் வேலை அனுமதியுடைய வெளிநாட்டு ஊழியர்களுக்கு PR மற்றும் குடியுரிமை ஏன் வழங்கப்படுவதில்லை என்ற கேள்வி பெரும்பாலானோருக்கு இருக்கிறது.
பொதுவாக பொருளாதார, சமூக மற்றும் அரசாங்க கொள்கை சார்ந்த சில காரணங்களுக்காக சிங்கப்பூரில் ஒர்க் பெர்மிட் வேலை அனுமதியுடைய வெளிநாட்டு ஊழியர்களுக்கு நிரந்தரவாசம் (PR) அல்லது குடியுரிமை வழங்கப்படுவதில்லை.
ஒர்க் பெர்மிட் (Work Permit) அனுமதிச் சீட்டின் தன்மை
ஒர்க் பெர்மிட் அனுமதிச் சீட்டுகள் (WP) பொதுவாகவே குறைந்த திறன் கொண்ட வெளிநாட்டு ஊழியர்களுக்கு வழங்கப்படுகின்றன. அவை:
- கட்டுமானம்
- கடல்சார்
- உற்பத்தி
- வீட்டு வேலைகள்
- சில சேவைகள்
இந்த வேலை அனுமதி சிங்கப்பூருக்கு மிக அவசியமானது என்றாலும் கூட இவை தற்காலிகமானவை என்றும் அல்லது ஊழியர்கள் குறுகிய காலத்துக்கு மட்டுமே வேலை செய்யமுடியும் என்றும் கருதப்படுகின்றன.
ஒர்க் பெர்மிட் அனுமதி, பெரும்பாலும் இந்தியா, பங்களாதேஸ், சீனா மற்றும் பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளைச் சேர்ந்த ஊழியர்களால் நிரப்பப்படுகின்றன.
ஒர்க் பெர்மிட் கட்டமைப்பு நோக்கமே நீண்ட கால தேவையை பூர்த்தி செய்வது அல்ல, மாறாக குறுகிய கால ஊழியர்கள் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் அது வடிவமைக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு ஊழியர்களுக்கான வேலை அனுமதி வகைகள்
வெளிநாட்டு ஊழியர்களுக்கு வழங்கப்படும் வேலை அனுமதியின் அடிப்படையில் அவர்களுக்கான சலுகைகளும் அடங்கியுள்ளன.
ஒர்க் பெர்மிட்
ஒர்க் பெர்மிட் அனுமதியில் குறைந்த திறன் கொண்ட வெளிநாட்டு ஊழியர்கள் மட்டுமே வேலைக்கு எடுக்கப்படுகின்றனர், இவர்களுக்கு குறைந்தபட்ச சலுகைகள் வழங்கப்படுகின்றன.
S பாஸ்
S பாஸ் அனுமதியில் நடுத்தர திறன் (Mid-skilled workers) கொண்ட வெளிநாட்டு ஊழியர்கள் வேலைக்கு எடுக்கப்படுகின்றனர்.
Employment பாஸ்
மேலும், Employment பாஸ் (EP) என்னும் உயர் வேலைவாய்ப்பு அனுமதியும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு வழங்கப்படுகிறது.
இதில் அதிக திறன் கொண்ட ஊழியர்கள் மட்டுமே வேலைக்கு எடுக்கப்படுகின்றனர், இவர்களுக்கு பெரும்பாலான சலுகைகள் உண்டு.
சிங்கப்பூரின் தற்போதைய கட்டமைப்பை பொறுத்தவரை, S பாஸ் மற்றும் EP வைத்திருப்பவர்கள் மட்டுமே PR க்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்களாகலாம்.
அவர்களுக்கான தகுதியாக கீழ்க்கண்டவை கட்டாயம் பார்க்கப்படும்;
- வருமானம்
- கல்வி
- திறன்கள்
- பொருளாதார பங்களிப்பு
- தங்கும் காலம்
வெளிநாட்டு ஊழியர்களுக்கான ஒதுக்கீடு /சார்பு விகிதம்
சிங்கப்பூர், வெளிநாட்டு ஊழியர்களுக்கான ஒதுக்கீடுகள் மற்றும் சார்பு விகித உச்சவரம்புகளை வரையறுத்து அதனை கடுமையாகவும் அமல்படுத்துகிறது.
ஏனெனில், உள்ளூர் ஊழியர்களிடையே நிலவும் வேலைவாய்ப்பு போட்டி, சமூக ஒருங்கிணைப்பு, உள்கட்டமைப்பு தொடர்பான அழுத்தம் ஆகியவை அதற்கான காரணங்களாக பார்க்கப்படுகிறது.
ஒர்க் பெர்மிட்க்கு PR அந்தஸ்து கொடுத்தால்?
அதிக எண்ணிக்கையில் இருக்கும் ஒர்க் பெர்மிட் அனுமதி வைத்திருப்பவர்களை PRகள் அல்லது குடிமக்களாக மாற அனுமதித்தால் அவர்களுக்கான வீடு, கல்வி, சுகாதாரம் ஆகிய அடிப்படையான தேவைகளில் சிரமம் ஏற்படும்.
மேலும், சமூக சமநிலையில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்றும், சிங்கப்பூரின் இறுக்கமான குடிநுழைவு கட்டுப்பாட்டுத் தத்துவம் பயனற்று போய்விடும் என்ற அச்சமும் பெரும்பாலும் நிலவுவதாக கூறப்படுகிறது.
ஒருங்கிணைப்பு பரிசீலனைகள்
நீண்ட கால குடிநுழைவு அனுமதியுடையவர்கள் ஆங்கில புலமை, பொருளாதார தன்னிறைவு, கல்வியில் உயர்ந்த நிலை போன்றவற்றை கொண்டுள்ளனர்.
இதனால் அவர்களுக்கு இலகுவாக PR கிடைப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஆகவே, PR மற்றும் குடியுரிமை ஆகியவை வெளிநாட்டு திறமைகளை ஈர்ப்பதற்கும் அதிக திறன் கொண்ட ஊழியர்களைத் தக்கவைத்துக்கொள்வதற்கும் பயன்படுத்தப்படும் கருவியாகும் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.
வெளிநாட்டு ஊழியர்களை கூடுதலாக வேலைக்கு எடுக்க அனுமதி – ஓட்டுனர்கள் பெரும் மகிழ்ச்சி