Last Updated:
ஐரோப்பாவில் ஒரே விந்தணு மூலம் 67 குழந்தைகள் பிறந்துள்ளன. இதில் 10 குழந்தைகளுக்கு அரியவகை புற்றுநோய் கண்டறியப்பட்டுள்ளது.
ஐரோப்பாவில் ஒருவரின் விந்தணு மூலம் 67 குழந்தைகள் பிறக்க வைக்கப்பட்டுள்ளன. இதில், தற்போது 10 குழந்தைகளுக்கு அரியவகை புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால், பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
முதலில் இந்த விவகாரம் வெளியே பெரிதாக தெரியாத நிலையில், இரு குழந்தைகளின் பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு அரிய வகை புற்றுநோய் இருப்பதை கண்டறிந்துள்ளனர். மேலும், அதற்கு மரபணு திரிபே காரணம் என தெரியவந்துள்ளது. உடனே அவர்கள் தனித்தனியே விந்தணு மையத்தைத் தொடர்பு கொண்டு கேட்டுள்ளனர்.
அப்போது, அந்த விந்தணு மையத்தினர், 2008ஆம் ஆண்டு விந்தணு பெறப்பட்டபோது இப்படியான மரபணு திரிபு கண்டறியப்படவில்லை என்று விளக்கம் கொடுத்துள்ளனர். மேலும், அந்த விந்தணு மூலம் கடந்த 2008 ஆண்டு முதல் 1015ஆம் ஆண்டு வரை மொத்தம் 67 குழந்தைகள் பிறந்துள்ளன எனும் தகவலும் தெரியவந்தது.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து பேசிய அந்நாட்டு மருத்துவர் ஒருவர், “விந்தணு தானத்தின் மூலம் பிறக்கும் குழந்தைகளின் அளவை வரம்புக்குள் கொண்டு வர வேண்டும். இது மரபணு நோயின் அசாதாரண பரவல்” எனத் தெரிவித்துள்ளார்.
May 25, 2025 10:18 PM IST
ஒரே விந்தணு மூலம் பிறந்த 67 குழந்தைகள்! 10 குழந்தைகளுக்கு அரியவகை கேன்சர் கண்டுபிடிப்பு


