Last Updated:
ஒரே நேரத்தில் இரு ஆண்களுடன் தொடர்பில் இருந்த பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆந்திராவில் ஒரே நேரத்தில் இரு ஆண்களுடன் தொடர்பில் இருந்த பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ரகசிய காதலர்களுக்குள் ஏற்பட்ட போட்டியில் ஓர் உயிர் பறிபோனதன் பகீர் பின்னணி என்ன?
ஆந்திர மாநிலம், கர்நூல் மாவட்டம், வேல்துர்தி நகரை சேர்ந்தவர் உஜ்மா. உஜ்மாவுக்கும், மஸ்தானுக்கும் 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு நான்கு குழந்தைகள் உள்ளனர். மஸ்தான் கட்டுமானத் தொழிலாளியாக வேலை செய்து குடும்பத்தைப் பராமரித்து வந்தார். ஆனால் அவருக்கு தேவையான வருமானம் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. எனவே குடும்ப தேவைகளை நிறைவு செய்ய மஸ்தான் தெலங்கானாவில் உள்ள சித்திபேட்டைக்கு வேலைக்குச் சென்றிருந்தார்.
இந்தச் சமயத்தில், உஜ்மா அதே பகுதியைச் சேர்ந்த முன்னா என்ற இளைஞனுடன் நெருங்கி பழகத் துவங்கி அந்த பழக்கம் தகாத உறவாக மாறியது. இந்நிலையில், உஜ்மாவின் குடும்ப செலவுகளை முன்னா கவனித்து வந்திருக்கிறார். இதற்கிடையில், உஜ்மா உள்ளூர் அரசியலில் ஈடுபட்ட நிலையில் அவருக்கு அதே பகுதியை சேர்ந்த உள்ள தோகர்சேடு கிராமத்தைச் சேர்ந்த மற்றொரு நபருடன் பழக்கம் ஏற்பட்டது.
அந்தப் பழக்கமும் உஜ்மாவின் இரண்டாவது தகாத உறவாக மாறி இருக்கிறது. உஜ்மாவின் இரண்டாவது ரகசிய காதலை தெரிந்து கொண்ட முன்னா அதை கைவிடுமாறு கூறி இருக்கிறார். ஆனால் இரண்டாவது ரகசிய காதலனிடமிருந்து நிறைய பணம் கிடைத்த காரணத்தால் அவரை தவிர்க்க உஜ்மாவுக்கு மனது வரவில்லை. எனவே அப்படியெல்லாம் ஏதும் இல்லை என்று முன்னாவை சமாதானம் செய்த உஜ்மா ஒரே நேரத்தில் இரண்டு பேரிடமும் ரகசிய தொடர்பை தொடர்ந்து இருக்கிறார்.
இதனால் கோபமடைந்த முன்னா, “உன்னுடைய தொடர்பு எனக்கு தேவையில்லை. நான் கொடுத்த மொத்த பணத்தையும் திருப்பிக் கொடு” என்று கேட்டு அழுத்தம் கொடுக்கத் துவங்கினார். ஆனால் உஜ்மா வாங்கிய பணத்தை திருப்பிக் கொடுக்காமல் முன்னாவை மிரட்டியதாக கூறப்படுகிறது. மேலும் தனக்கிருந்த உள்ளூர் அரசியல் பிரமுகரின் செல்வாக்கை பயன்படுத்தி உஜ்மா முன்னா மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்நிலையில் பூட்டிய வீட்டுக்குள் வெட்டி கொலை செய்யப்பட்ட நிலையில் உஜ்மாவின் உடல் கிடந்தது. இது பற்றிய தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து உஜ்மா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணையை துவக்கினர். போலீசார் நடத்திய விசாரணையின்போது அந்த பகுதி மக்கள் அளித்த தகவல் அடிப்படையில், உஜ்மா வீட்டிற்கு வந்த முன்னா அவருடன் சண்டை போட்டு வெட்டி கொலை செய்திருக்கிறார்.
அப்போது ஏற்பட்ட மோதலில் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கத்தியை உஜ்மா பிடிக்க முயன்றபோது அவருடைய விரல்கள் துண்டாகி விட்டன. அதன் பின் முன்னா வீட்டை வெளிப்புறமாக பூட்டி விட்டு தப்பி சென்று இருக்கிறார். வெளியில் சென்று இருந்த உஜ்மாவின் மூத்த மகள் வீடு திரும்பி வந்து பார்த்தபோது வீடு வெளிப்புறமாக பூட்டப்பட்டிருந்தது. ஆனால் உஜ்மாவின் செருப்புகள் வீட்டிற்கு வெளியே இருந்தன.
அக்கம் பக்கத்தினர் உதவியுடன் பூட்டை உடைத்து கதவை திறந்து பார்த்தபோது ரத்த வெள்ளத்தில் உஜ்மா பிணமாக கிடப்பதை அவருடைய மூத்த மகள் மற்றும் அக்கம் பக்கத்தினர் பார்த்துள்ளனர். இந்த நிலையில் முன்னா மீது சந்தேகம் ஏற்பட்டு அவர் மீது உஜ்மாவின் மூத்த மகள் புகார் அளித்தார். ஆனால் முன்னா தப்பி தலைமறைவு ஆகிவிட்ட நிலையில் முன்னாவை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
October 27, 2025 5:30 PM IST


