Last Updated:
ஒரே நாளில் சுமார் 6 ஆயிரம் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன.
அமெரிக்காவில் அரசு நிர்வாகம் முடங்கி இருப்பதால் ஒரே நாளில் சுமார் 6 ஆயிரம் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன.
அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிதி மசோதா தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து, அந்நாட்டு அரசு நிர்வாகம் முடங்கியது. இதனால் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவது தடைப்பட்டுள்ளதுடன், பெரும்பாலானோரை கட்டாய விடுப்பில் அனுப்ப வேண்டிய சூழல் ஏற்பட்டது.
இந்நிலையில், அமெரிக்காவின் விமானநிலையங்களில் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு ஊழியர்களுக்கு சம்பளம் முறையாக வழங்கப்படவில்லை. இதனால், பெரும்பாலானோருக்கு கட்டாய விடுப்பு அளிக்கப்பட்டுள்ளதால், ஒரே நாளில் சுமார் 6 ஆயிரம் விமானங்களின் சேவைகள் பாதிக்கப்பட்டன.
குறிப்பாக, நியூயார்க்கில் உள்ள லா கார்டியா விமான நிலையம், வாஷிங்டனில் உள்ள ரீகன் விமான நிலையம், நியூஜெர்சி விமான நிலையம் ஆகியவற்றில் விமானங்கள் பல மணிநேரம் தாமதமாக இயக்கப்பட்டன. ஊதியம் முறையாக வழங்கப்படாததால், அரசு ஊழியர்கள் பகுதி நேர பணிகளில் ஈடுபடுவதாக விமான போக்குவரத்து கட்டுப்பாட்டுப் பிரிவு ஊழியர்கள் சங்கத் தலைவர் தெரிவித்துள்ளார். இதனால், அமெரிக்கர்கள் மட்டுமின்றி, மற்ற நாட்டினரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
October 25, 2025 10:33 AM IST


