Last Updated:
One Nation One Election | ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து கருத்து தெரிவிக்க தமிழ்நாடு அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் அனுப்பியது.
ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து கருத்து தெரிவிக்க தமிழ்நாடு அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதி உள்ளது.
மக்களவைக்கும், மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் முறைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் உள்பட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
ஆனால், அடுத்த மக்களவை தேர்தல் நடைபெற உள்ள 2029 ஆம் ஆண்டுக்குள் ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை அமல்படுத்துவதில் மத்திய அரசு உறுதியாக உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், தமிழ்நாடு அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது. அதில், ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து கருத்துகளை தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக, ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்துவதில் உள்ள சிக்கல்கள் பற்றி ஆராய, முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் 8 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.
மத்திய அமைச்சர் அமித் ஷா, காங்கிரஸ் எம்பி ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, குலாம் நபி ஆசாத் உள்ளிட்டோர் இடம்பெற்றிருந்த இந்த குழு, அறிக்கை தயாரித்து அண்மையில் மத்திய அரசிடம் சமர்பித்தது.
அதன்பிறகு நாடாளுமன்றத்தில் ‛ஒரே நாடு ஒரே தேர்தல்’ தொடர்பான சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, நாடாளுமன்ற கூட்டு குழு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
Delhi,Delhi,Delhi


