Last Updated:
சுப்மான் கில், நரேந்திர மோடி மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிராக 112 ரன்கள் குவித்து, 50ஆவது ஒருநாள் போட்டியில் சதம் அடித்த முதல் இந்திய வீரர் ஆனார். 54 இன்னிங்ஸில் 2500 ரன்கள் கடந்தார்.
இந்தியாவின் துணை கேப்டன் சுப்மான் கில், அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில், இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் அபாரமான சதம் அடித்து அசத்தினார்.
தன் 50ஆவது ஒருநாள் போட்டியில் விளையாடிய கில், 102 பந்துகளில் 112 ரன்கள் குவித்தார். இது ஒருநாள் போட்டிகளில் அவரது ஏழாவது சதமாகும். இந்தப் போட்டியில் இந்திய அணி இங்கிலாந்தை வீழ்த்தி தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
தொடக்கத்தில் பொறுமையாக விளையாட தொடங்கிய கில், பின்னர் பவுண்டரிகள் அடித்து ரன்வேகத்தை அதிகரித்தார். இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் அவரை சமாளிக்க முடியாமல் திணறினர். இதையடுத்து, கில் தனது சதத்தை 95 பந்துகளில் எட்டினார்.
இந்த சதத்தின் மூலம் ஷுப்மன் கில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார்.
1. அதிவேகமாக 2500 ரன்கள் கடந்த வீரர்:
சுப்மான் கில் ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 2500 ரன்கள் எட்டிய வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். 54 இன்னிங்ஸில் இந்த இலக்கை ஷுப்மன் கில், தென்னாப்பிரிக்காவின் ஹாஷிம் ஆம்லாவின் (57 இன்னிங்ஸ்) சாதனையை முறியடித்துள்ளார்.
2. 50ஆவது போட்டியில் அரைசதம் அடித்த முதல் இந்திய வீரர்:
50ஆவது ஒருநாள் போட்டியில் சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை கில் பெற்றுள்ளார். இதுவரை இந்தியாவுக்காக 65 ஆண்கள் மற்றும் 20 பெண்கள் 50 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார்கள். ஆனால் இதுவரை எந்த வீரரும் 50ஆவது போட்டியில் சதமடிக்கவில்லை.
இதையும் படிக்க: கம்மின்ஸ் முதல் பும்ரா வரை..! சாம்பியன்ஸ் கோப்பை தொடரிலிருந்து விலகிய 9 முக்கிய வீரர்கள்
3. ஒரே மைதானத்தில் 3 வடிவிலான போட்டிகளிலும் சதமடித்த வீரர்:
நரேந்திர மோடி மைதானத்தில் மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை கில் பெற்றார். உலக அளவில் இதுவரை 4 வீரர்கள் மட்டும் தான் ஒரே மைதானத்தில் அனைத்து வடிவிலான போட்டிகளிலும் சதமடித்துள்ளார்கள்.
4: குறைந்த இன்னிங்சில் 7 சதங்கள் அடித்த வீரர்
குறைந்த இன்னிங்ஸில் ஏழு ஒருநாள் சதங்கள் அடித்த இந்திய வீரர் என்ற பெருமையை கில் பெற்றார். இதனால் ஷிகர் தவான் (54 இன்னிங்ஸ்) மற்றும் விராட் கோலி (63 இன்னிங்ஸ்) ஆகியோரின் சாதனைகளை கில் முறியடித்துள்ளார்.
Ahmedabad,Gujarat
February 13, 2025 10:38 AM IST


