பிரிகேட் குழுமம் 2030ஆம் ஆண்டுக்குள் சென்னையில் சுமார் ரூ.8,000 கோடியை முதலீடு செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது.
பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ரியல் எஸ்டேட் நிறுவனமான பிரிகேட் குழுமம், சென்னையில் 15 மில்லியன் சதுர அடி பரப்பளவிலான கட்டடங்களை கட்ட உள்ளது. குறிப்பாக, மத்திய சென்னையில் முதல் திட்டத்தை செயல்படுத்த உள்ளது.
அடுக்குமாடி குடியிருப்புகள், அலுவலகங்கள், சில்லறை விற்பனைக் கடைகள் ஆகியவற்றை கொண்ட ஒரு மிகப்பெரிய அமைப்பை சுமார் 15 மில்லியன் சதுர அடியில் நிர்மானிக்க இருக்கிறது. குறிப்பாக, ரூ.13,000 கோடியில் 12 மில்லியன் சதுர அடிக்கு மேல் குடியிருப்புகள் கட்ட முடிவு செய்துள்ளது.
மவுண்ட் ரோடு பகுதியில் பிரிகேட் ஐகான், குடியிருப்பு, சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் அலுவலகங்களை கட்ட திட்டமிடப்பட்டுள்ள நிலையில், சிங்கப்பூரில் உலகப் புகழ்பெற்ற கட்டடக் கலைஞர் SOG வடிவமைத்துள்ளார். ஏற்கெனவே, பிரிகேட் குழுமம் சென்னையில் சுமார் 5 மில்லியன் சதுர அடியிலான கட்டடங்களை கட்டியுள்ளது.
ஒவ்வொரு துறையிலும் எங்களது பங்களிப்பு நகரத்திற்கு மட்டுமல்லாமல், நகரத்தில் வாழும் மக்களின் வாழ்க்கை முறையிலும் மாற்றத்தை ஏற்படுத்தும் எனக்கூறும் பிரிகேட் குழுமம், உலக முதலீட்டாளர்கள் சந்திப்பின் ஒரு பகுதியாக 4 திட்டங்களுக்கு தமிழ்நாடு அரசுடன் ஒப்பந்தங்கள் செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க:
மாதம் வட்டி மட்டுமே ரூ.9250.. போஸ்ட் ஆபிஸின் இந்த சூப்பர் திட்டம் பற்றி உங்களுக்கு தெரியுமா?
1986ஆம் ஆண்டு நிறுவப்பட்ட பிரிகேட் குழுமம், பெங்களூரு, சென்னை, ஐதராபாத், மைசூர், கொச்சி, குஜராத் உள்ளிட்ட பல இடங்களில் குடியிருப்புகள், சில்லறை விற்பனைக் கடைகள், ஹோட்டல்கள் மற்றும் அலுவலகங்களை கட்டியுள்ளது.
.
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)