ஓய்வு பெறும் வரை 13 ஆண்டுகள் ஒரே அணிக்காக விளையாடிய அரிதான வீரர்களில் இவரும் ஒருவர். 2013 ஐபிஎல் இறுதிப் போட்டியில் சிஎஸ்கே-வுக்கு எதிராக இக்கட்டான நிலையில் அவர் அடித்த 60 ரன்கள் மும்பைக்கு முதல் கோப்பையைப் பெற்றுத்தந்தது. மும்பை அணி வென்ற 5 ஐபிஎல் கோப்பைகள் (2013, 2015, 2017, 2019, 2020) மற்றும் 2 சாம்பியன்ஸ் லீக் கோப்பைகளிலும் பொல்லார்டின் பங்கு மிக முக்கியமானது. இக்கட்டான நேரங்களில் அதிரடியாக ஆடி போட்டியை மாற்றுவதில் இவர் வல்லவர். 189 போட்டிகளில் விளையாடி 3,412 ரன்களையும், 69 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.


