இந்தியாவின் ஆயுள் காப்பீட்டுத் துறையின் முதுகெலும்பாகக் கருதப்படும் எல்ஐசி முகவர்களின் வருமானம் குறித்து மக்கள் பல்வேறு ஊகங்களைச் சொல்கிறார்க்ள. சிலர் லட்சங்களிலும், சிலர் ஆயிரங்களிலும் சம்பாதிப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த ஏஜெண்டுகளுக்கு பணம் கொடுக்கும் நிறுவனம் மட்டுமே உண்மையை சொல்ல முடியும். எனவே எல்ஐசி முகவர்களின் சம்பளம் தொடர்பான தரவுகள் பல வெளிவந்திருக்கின்றன. தரவுகளைப் பார்க்கும்போது, நாட்டின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள முகவர்களின் வருமானத்தில் நிறைய வித்தியாசம் இருப்பது தெளிவாகத் தெரிகிறது.
இன்சூரன்ஸ் ஏஜெண்டுகளின் வருமானம் அவர்களின் வேலை செய்யும் திறனைப் பொறுத்தது மட்டுமல்ல, அந்த மாநிலம் அல்லது பிராந்தியத்தின் பொருளாதார நிலை மற்றும் மக்கள் தொகை போன்ற பல்வேறு காரணிகளையும் சார்ந்துள்ளது. இமாச்சலப் பிரதேசத்தில் எல்ஐசி முகவர்களின் சராசரி மாத வருமானம் மிகக் குறைவு, இது சுமார் ரூ.10,328 ஆகும். மறுபுறம், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் முகவர்களின் சராசரி வருமானம் அதிகபட்சமாக உள்ளது. இது மாதத்திற்கு ரூ.20,446 ஆக உள்ளது.
இப்போது மற்றொரு சுவாரஸ்யமான புள்ளிவிவரம் என்னவென்றால், அதிக வருவாய் ஈட்டும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில், எல்ஐசி முகவர்களின் எண்ணிக்கையும் குறைவாக உள்ளது. இங்கு 273 முகவர்கள் மட்டுமே உள்ளனர். இருப்பினும் இதுவும் வருவாய் அதிகரிப்புக்கு காரணம். மறுபுறம், இமாச்சலப் பிரதேசத்தில் மிகக் குறைந்த வருவாய் உள்ளது. அந்த மாநிலத்தில் 12,731 முகவர்கள் உள்ளனர். அதிக முகவர்கள், அதிக போட்டி என்று நாம் புரிந்து கொள்ளலாம். அதிக போட்டி என்பது குறைவான வருமானத்தை கொடுக்கிறது.
நாடு முழுவதும் சுமார் 13 லட்சத்து 90 ஆயிரம் முகவர்களைக் கொண்ட எல்ஐசி இந்தியாவில் ஒரு பெரிய நிறுவனமாகும். உத்தரபிரதேசத்தில் அதிக எண்ணிக்கையிலான எல்ஐசி முகவர்கள் உள்ளனர். 1.84 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் அங்கு பணியாற்றுகிறார்கள்.
அவர்களின் சராசரி வருவாய் மாதத்திற்கு ரூ.11,887 ஆகும். மகாராஷ்டிராவில் 1.61 லட்சத்திற்கும் அதிகமான முகவர்கள் உள்ளனர். அவர்களின் சராசரி வருமானம் மாதம் ரூ.14,931 ஆகும். மேற்கு வங்காளத்தில் 1.19 லட்சம் முகவர்கள் உள்ளனர், அவர்களின் சராசரி வருமானம் மாதம் ரூ.13,512 ஆக உள்ளது.
தமிழ்நாடு, கர்நாடகா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் மற்றும் டெல்லி-என்சிஆர் போன்ற மாநிலங்களிலும் எல்ஐசி முகவர்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். அவர்களின் சராசரி வருவாய் இந்த உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம், மகாராஷ்டிரா மாநிலங்களை விட சற்று குறைவாக உள்ளது.
எல்.ஐ.சி. முகவர்கள் எவ்வளவு பாலிசிகளை விற்கிறார்களோ, அவ்வளவு அதிகமாக அவர்கள் சம்பாதிக்கிறார்கள். இந்த காரணத்திற்காக அவர்கள் வாடிக்கையாளர்களுடன் நல்ல உறவுகளை உருவாக்க வேண்டும். இது தவிர, எல்ஐசி அதன் முகவர்களுக்கு தொடர்ச்சியான பயிற்சி அளிக்கிறது. இதனால் அவர்கள் புதிய தயாரிப்புகள் மற்றும் விற்பனை நுட்பங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.
சம்பாதிப்பதைத் தவிர, எல்ஐசி முகவர்கள் பணிக்கொடை, ஓய்வூதியத் திட்டங்கள் மற்றும் போனஸ் போன்ற பல பலன்களையும் பெறுகின்றனர்.
இதையும் படிங்க – இந்த பழத்தை பயிரிட்டால் போதும்… ஒரு வருடத்தில் ஓஹோன்னு லாபம் பாக்கலாம்…
எல்ஐசி முகவராக ஆக, விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 18 வயது நிரம்பியவராகவும், 12ஆம் வகுப்பு (நகர்ப்புறம்) அல்லது 10ஆம் வகுப்பு (கிராமப்புறப் பகுதிகள்) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். முகவராக ஆக, அருகில் உள்ள எல்ஐசி கிளையில் உள்ள மேம்பாட்டு அதிகாரியை தொடர்பு கொள்ள வேண்டும். 25 மணிநேர IRDAI பயிற்சிக்குப் பிறகு, நீங்கள் அதன் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். தேர்வில் வெற்றி பெற்ற பிறகு, எல்ஐசியில் பதிவு செய்து முகவராகப் பணிபுரிய ஆரம்பிக்கலாம். ஏஜெண்டின் வருமானம் கமிஷன் அடிப்படையிலானது, மேலும் நல்ல செயல்திறன் இருந்தால் பதவி உயர்வு கிடைக்கும்.
.
&w=750&resize=750,375&ssl=1)
