இலங்கையில் முதல் தடவையாக தேசிய ரின்மீன் உற்பத்தி நிறுவனமான Slic Lanka Fisheries Pvt. Ltd. நிறுவனத்தினால் தனது நவீன தயாரிப்பான நீண்ட நாட்களுக்கு பழுதடையாமல் பாதுகாக்கக் கூடிய ஒருகிலோ எடை கொண்ட ஜெக் மெக்கரல் செமன் பக்கற் ஒன்றை சந்தைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இப்புதிய தயாரிப்பை சந்தைக்கு அறிமுகப்படுத்தும் நிகழ்வு நேற்று (21) கடற்றொழில் அமைச்சில் நடைபெற்றது. SLIC நிறுவனத்தின முகாமைத்துவப் பணிப்பாளரான கலாநிதி கபில பாலசூரியவினால் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் வோனந்தாவிடம் சம்பிரதாயபூர்வமாக இந்த செமன் பக்கற் கைளிக்கப்பட்டது. பேக்கரி உற்பத்தியாளர்களுக்கு உகந்த வகையில் இது தயாரிக்கப்பட்டுள்ளதாக பாலசூரிய அமைச்சரிடம் தெரிவித்தார்.
இதன் போது அமைச்சர் கருத்து தெரிவிக்கையில், உள்ளூர் உற்பத்திகளை ஊக்குவிப்பதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தின் நோக்கமெனவும் அதற்காக அனைத்து உதவிகளையும் அரசாங்கம் தேசிய உற்பத்தியாளர்களுக்கு வழங்கத் தயாராக இருப்பதாகவும் இதற்கு SLS (இலங்கை தரக்கட்டுப்பாட்டு நிறுவனம்) தரச் சான்றிதழை விரைவில் பெற்றுக் கொள்ளுமாறும் ஆலோசனை வழங்கினார்.
நிகழ்வில் கடற்றொழில் அமைச்சின் செயலாளர் நிசாந்த விக்கிரமசிங்க உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

