Last Updated:
இந்திய பங்குச்சந்தை மும்பை சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்ந்து 6 லட்சம் கோடி ரூபாய் வருமானம் ஈட்டியது. ஈரான் வெளியுறவுத்துறை துணை அமைச்சர் மஜித் தகத் ரவன்ச்சி பேச்சால் பங்குச்சந்தை ஏற்றம்.
ஒரு வாரத்திற்கு பின்னர் இந்திய பங்குச்சந்தை ஏற்றத்துடன் நிறைவு பெற்றன.
இஸ்ரேல், அமெரிக்கா, ஈரான் இடையிலான போர் காரணமாக இந்திய பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி அடைந்த நிலையில் கடந்த 3 நாட்களில் மட்டும் முதலீட்டாளர்கள் 21 லட்சத்து 90 ஆயிரம் கோடி ரூபாயை இழந்தனர். இந்நிலையில், ஆணு ஆயுத திட்டத்திற்கு நிகரான ஒன்றை அமெரிக்கா தர சம்மதித்தால் அணு ஆயுத ஆராய்ச்சியை கைவிடுவதாக ஈரான் வெளியுறவுத்துறையின் துணை அமைச்சர் மஜித் தகத் ரவன்ச்சி தெரிவித்ததாக செய்தி வெளியானது.
ஈரான் வெளியுறவுத்துறை துணை அமைச்சரின் பேச்சால் ஒரு வாரத்திற்கும் மேலாக நீடிக்கும் போர் முடிவுக்கு வரும் என்ற கருத்து உருவானது. இந்த தகவல் வெளியான 20 நிமிடங்களில் இந்திய பங்குச்சந்தைகள் கிடுகிடுவென உயரத் தொடங்கின. மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் கிட்டத்தட்ட 900 புள்ளிகள் உயர்ந்து முதலீட்டாளர்களுக்கு 6 லட்சம் கோடி ரூபாய் வருமானத்தை ஈட்டி தந்தது.
காலை வர்த்தகம் தொடங்கும்போது 79 ஆயிரத்து 530 புள்ளிகளாக இருந்த சென்செக்ஸ், மாலையில் 80 ஆயிரத்து 15 புள்ளிகளில் நிறைவு பெற்றது. அதேபோல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிப்டியும் ஆயிரத்து 100 புள்ளிகள் உயர்ந்து 24 ஆயிரத்து 750 புள்ளிகளில் நிறைவு பெற்றது.
Mumbai,Maharashtra


