• Login
Saturday, April 4, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

ஒரு மணி நேரத்தில் 10 செ.மீ மழை.. ஜம்மு காஷ்மீர் மேக வெடிப்பில் சிக்கி 60 பேர் பலி | இந்தியா

GenevaTimes by GenevaTimes
August 16, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
ஒரு மணி நேரத்தில் 10 செ.மீ மழை.. ஜம்மு காஷ்மீர் மேக வெடிப்பில் சிக்கி 60 பேர் பலி | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:August 16, 2025 6:52 AM IST

ஜம்மு காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில் மேகவெடிப்பில் 60 பேர் உயிரிழந்தனர். சோஷ்டி கிராமத்தில் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு ஏற்பட்டது. 160 பேர் மீட்கப்பட்டனர், 30 பேர் கவலைக்கிடமாக உள்ளனர்.

ஜம்மு காஷ்மீர் மேக வெடிப்புஜம்மு காஷ்மீர் மேக வெடிப்பு
ஜம்மு காஷ்மீர் மேக வெடிப்பு

ஜம்மு காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில் ஏற்பட்ட மேகவெடிப்பில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளது.

ஜம்மு-காஷ்மீரின் கிஷ்துவார் மாவட்டத்தில் திடீரென மேகவெடிப்பு ஏற்பட்டது. அதாவது ஒரு மணி நேரத்தில் 10 சென்டி மீட்டர் மழை கொட்டியது. இதனால் சோஷ்டி கிராமத்தில் கடுமையான வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது. வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு காரணமாக, 16 குடியிருப்புகள், அரசு கட்டடங்கள், 3 கோயில்கள், 30 மீட்டர் அளவிலான மேம்பாலம், வாகனங்கள், மற்றும் ஒரு பாதுகாப்புப் படை முகாம் உள்ளிட்டவை அடித்துச் செல்லப்பட்டன.

சோஷ்டி கிராமம் மச்சைல் மாதா கோயிலுக்கு செல்லும் வழி என்பதால் ஏராளமான யாத்ரீகர்கள் யாத்திரை மேற்கொண்டு வந்தனர். அப்போது ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலர் உயரிழந்தனர். இதில் 2 சிஐஎஸ்எஃப் வீரர்களும் அடங்குவர். அதேநேரம், பலர் மாயமாகி இருப்பதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 160 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இதில் 30க்கும் அதிகமானோரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மீட்கப்பட்ட பொதுமக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்திய ராணுவம், தேசிய பேரிடர் மீட்புப் படை , மாநில பேரிடர் மீட்புப் படை மற்றும் காவல்துறை ஆகியவை இணைந்து மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. மீட்பு பணிகளில் விமானப்படை வீரர்களும் இறங்கியுள்ளனர். ஆனால், மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டர் பயன்படுத்தி மீட்பு பணிகளை மேற்கொள்ள முடியாத சூழல் நிலவுகிறது.

பலத்த மழை மற்றும் கடினமான நிலப்பரப்பு காரணமாக மீட்புப் பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்த துயரச் சம்பவத்தைத் தொடர்ந்து மசாயில் மாதா யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. பாதிப்புகளை ஆய்வு செய்ய சோஷ்டி சென்ற மத்திய அமைச்சர் ஜித்தேந்திரா சிங்கின், ஹெலிகாப்டர் தரையிறங்க இடம் இல்லாததால் ஒரு மணி நேரம் வட்டமடித்து விட்டு மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே திரும்பிச் சென்றது. பின்னர் சாலை மார்க்கமாக அமைச்சர் ஜித்தேந்திரா சிங், சோஷ்டி சென்றார்.

சோஷ்டி-க்கு அருகே உள்ள மச்சைல் மற்றும் ஹமோரி கிராமங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது…. இங்கு நூற்றுக்கணக்கான மக்கள் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது… மின்சாரம் மற்றும் தொலைத் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதால், கிராம மக்களின் நிலை குறித்து எதுவும் தெரியவில்லை என அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
Location :

Jammu,Jammu and Kashmir

First Published :

August 16, 2025 6:52 AM IST

Read More

Previous Post

Tamilmirror Online || லொஹானின் மறைவுக்கு மஹிந்த இரங்கல்

Next Post

ரூ.5 லட்சம் எமர்ஜென்சி ஃபண்ட் உருவாக்குவது எப்படி? இந்த ஆப்ஷன்களை ட்ரை பண்ணுங்க! | வணிகம்

Next Post
ரூ.5 லட்சம் எமர்ஜென்சி ஃபண்ட் உருவாக்குவது எப்படி? இந்த ஆப்ஷன்களை ட்ரை பண்ணுங்க! | வணிகம்

ரூ.5 லட்சம் எமர்ஜென்சி ஃபண்ட் உருவாக்குவது எப்படி? இந்த ஆப்ஷன்களை ட்ரை பண்ணுங்க! | வணிகம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin