• Login
Sunday, March 22, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

“ஒரு பூத்திலும் ஆர்.ஜே.டி. வெல்லக்கூடாது.. காங்கிரஸ் முடிவு செய்துவிட்டது” – பிரதமர் நரேந்திர மோடி | இந்தியா

GenevaTimes by GenevaTimes
November 2, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
“ஒரு பூத்திலும் ஆர்.ஜே.டி. வெல்லக்கூடாது.. காங்கிரஸ் முடிவு செய்துவிட்டது” – பிரதமர் நரேந்திர மோடி | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:November 02, 2025 6:09 PM IST

பிரதமர் நவாடா தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ஆர்.ஜே.டி, காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் ஒன்றுக்கொன்று எதிராக தேர்தல் வேலைகளை செய்துவருவதாக விமர்சித்துள்ளார்.

News18
News18

பிகார் மாநிலம், நவாடா பகுதியில் நடந்த பிரச்சாரத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “பிகார் மாநில காங்கிரஸ் தலைவருக்கு எதிராக ஆர்.ஜே.டி. தனது சொந்தக் கட்சி வேட்பாளரை நிறுத்தியதை இந்த நாடே கண்டது. அதேபோல், எந்த பூத்திலும் ஆர்.ஜே.டி. வெல்லக் கூடாது என காங்கிரஸ் முடிவு செய்துள்ளது” என பேசியுள்ளார்.

பிகார் சட்டமன்றத்திற்கு வரும் 6 மற்றும் 11 ஆகிய இரு தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து 14ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதற்காக அரசியல் கட்சியினர் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுவருகின்றனர்.

குறிப்பாக பிகார் மாநிலத்தில் வரும் 6ஆம் தேதி நடைபெறும் முதற்கட்ட வாக்குப் பதிவு தொகுதிகளில் அரசியல் கட்சியினர் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுவருகின்றனர். அந்தவகையில் நவாடா பகுதியில் இன்று பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

நவாடா பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், “சுதந்திரத்திற்கு பிறகு வந்த அரசு, சிறு விவசாயிகளின் நலனுக்கு முன்னுரிமை கொடுக்கவில்லை. பிகார் மாநிலத்தின் 2 லட்சம் விவசாயிகளின் வங்கிக் கணக்கில், எந்த ஊழலும், கமிஷனும் இன்றி நேரடியாக ரூ. 650 கோடி வரவு வைக்கப்பட்டுள்ளது.

இதே காட்டு அரசாகவும், அவர்களது கூட்டணி அரசு, காங்கிரஸ் இருந்திருந்தால் உங்கள் பணம் அனைத்தும் கொள்ளை அடிக்கப்பட்டிருக்கும். டெல்லியில் இருந்து விடுவிக்கப்படும் பணம் இறுதியாக கிராமத்தைச் சென்றடையும்போது வெறும் 15 பைசா தான் செல்கிறது என காங்கிரஸே சொல்லியுள்ளது.

பிகார் மாநில காங்கிரஸ் தலைவருக்கு எதிராக ஆர்.ஜே.டி. தனது சொந்தக் கட்சி வேட்பாளரை நிறுத்தியதை இந்த நாடே கண்டது. அதேபோல், எந்த பூத்திலும் ஆர்.ஜே.டி. வெல்லக் கூடாது என காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. இரண்டாம் கட்ட வாக்குப்பதிவான 11ஆம் தேதிக்கு பிறகு காங்கிரஸும், ஆர்.ஜே.டியும் ஒருவருக்கொருவர் என்ன செய்துகொள்வார்கள் என்பதை நீங்களே பார்ப்பீர்கள்.

ஒரு காலத்தில் ஆயுதங்களை ஏந்திய மாவோயிஸ்ட் பயங்கரவாதிகள், இப்போது தங்கள் கைகளில் அரசியலமைப்பை ஏந்தியிருப்பதைப் பார்த்து, நகரங்களில் வசிக்கும் நகர்ப்புற நக்சல்கள் இரவில் தூக்கத்தை தொலைத்துவிட்டார்கள்” என பேசினார்.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

November 02, 2025 6:08 PM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

“ஒரு பூத்திலும் ஆர்.ஜே.டி. வெல்லக்கூடாது.. காங்கிரஸ் முடிவு செய்துவிட்டது” – பிரதமர் நரேந்திர மோடி

Read More

Previous Post

தமிழர்களை வேட்டையாடிய இந்திய அமைதிப் படையின் யுத்தத்தாங்கிகள்!

Next Post

IND vs AUS : வாஷிங்டன் சுந்தர் அபார பேட்டிங்.. 3ஆவது டி20-யில் ஆஸி.-யை வென்றது இந்திய அணி | விளையாட்டு

Next Post
IND vs AUS : வாஷிங்டன் சுந்தர் அபார பேட்டிங்.. 3ஆவது டி20-யில் ஆஸி.-யை வென்றது இந்திய அணி | விளையாட்டு

IND vs AUS : வாஷிங்டன் சுந்தர் அபார பேட்டிங்.. 3ஆவது டி20-யில் ஆஸி.-யை வென்றது இந்திய அணி | விளையாட்டு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin