• Login
Thursday, May 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

ஒரு பவுன் ரூ.65,800-ஐ கடந்து தங்கம் விலை வரலாறு காணாத உச்சம்! | Gold rate reaches new height today in chennai

GenevaTimes by GenevaTimes
March 14, 2025
in வணிகம்
Reading Time: 5 mins read
0
ஒரு பவுன் ரூ.65,800-ஐ கடந்து தங்கம் விலை வரலாறு காணாத உச்சம்! | Gold rate reaches new height today in chennai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சென்னை: சென்னையில் இன்று தங்கம் விலை பவுன் ரூ.65,800-ஐ கடந்து மற்றுமொரு புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

அதன்படி, 22 கேரட் ஆபரணத் தங்கம் இன்று (மார்ச் 14-ஆம் தேதி) கிராமுக்கு ரூ.110 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.8,230-க்கும், சவரனுக்கு ரூ.880 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.65,840-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை இன்று கிராமுக்கு ரூ.2 உயர்ந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.112-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,12,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப, இந்தியாவில் தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. இந்த ஆண்டில் ஜனவரி 29-ம் தேதி முதல் தங்கம் விலை உயரத் தொடங்கியது. ஜனவரி 31-ம் தேதி ஒரு பவுன் ஆபரண தங்கம் ரூ.61,000-ஐயும், பிப்ரவரி 1-ம் தேதி ரூ.62,000-ஐயும் தாண்டியது. பிப்ரவரி 11-ம் தேதி ரூ.64,480 என்றும், 20-ம் தேதி ரூ.64,560 என்றும் அதிகரித்தது.

இதன் பிறகு, ஒருசில நாட்கள் சற்று விலை குறைந்தாலும், பிப்ரவரி 25-ம் தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.64,600 ஆக உயர்ந்து, புதிய உச்சத்தை தொட்டது. இதன்பிறகு, ஏற்ற இறக்கமாக இருந்து வந்தது.

சென்னையில் ஆபரண தங்கம் விலை நேற்று புதிய உச்சத்தை பதிவு செய்தது. நேற்று கிராமுக்கு ரூ.55 என பவுனுக்கு ரூ.440 உயர்ந்தது. இதனால், ஒரு கிராம் தங்கம் ரூ.8,120, ஒரு பவுன் ரூ.64,960 என உயர்ந்தது. இதன்மூலம் ஒரு பவுன் தங்கம் விலை ரூ.65,000-ஐ நெருங்கியது. இந்நிலையில், இன்று தங்கம் விலை பவுன் ரூ.65,800-ஐ கடந்து மற்றுமொரு புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. இந்த புதிய உச்சம் திருமணம் உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளுக்காக தங்கம் வாங்கும் சாமானிய மக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



Read More

Previous Post

‘ஐபிஎல்லை வெளிநாட்டு வீரர்கள் புறக்கணிக்க வேண்டும்’ – இன்சமாம் வலியுறுத்தல் | ex pakistan captain Inzamam asks foreign cricket boards to boycott IPL

Next Post

Menteri dalam negeri tolak rayuan pendaftaran Urimai | Makkal Osai

Next Post
Menteri dalam negeri tolak rayuan pendaftaran Urimai | Makkal Osai

Menteri dalam negeri tolak rayuan pendaftaran Urimai | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin