Last Updated:
மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் கூறியதாவது, ரயில் டிக்கெட் முன்பதிவு முறையை மேம்படுத்தி, ஒரு நிமிடத்தில் 25 ஆயிரம் டிக்கெட்கள் முன்பதிவு செய்ய முடியும்.
ரயில் டிக்கெட் முன்பதிவு முறையை மேம்படுத்தி உள்ளதாக தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், தற்போது ஒரு நிமிடத்தில் 25 ஆயிரம் டிக்கெட்கள் வரை முன்பதிவு செய்ய முடியும் என்றார்.
இந்திய ரயில்வேயில் ரயில் டிக்கெட் முன்பதிவு முறையை மேம்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதிலளித்தார். அதில், ரயில் டிக்கெட் முன்பதிவு முறையின் திறன் மேம்பாடு மற்றும் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவது என்பது தொடர்ந்து நடந்து வரும் செயல்முறை என்றார்.
மேலும், தற்போது உள்ள டிக்கெட் முன்பதிவு முறையில் ஒரு நிமிடத்தில் 25 ஆயிரம் டிக்கெட்கள் வரை முன்பதிவு செய்ய முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார். டிக்கெட் எடுக்கும் முறையை முழுமையாக மேம்படுத்தும் பணியில் இந்திய ரயில்வே ஈடுபட்டுள்ளது என்றும் அதன்படி ஹார்ட்வேர், சாஃப்ட்வேர், பாதுகாப்பு உள்கட்டமைப்பு மற்றும் புதிய தொழில்நுட்பங்களின் செயல்பாடுகள் உள்ளிட்டவை மேம்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
182 கோடி ரூபாய் செலவில் நடந்து வரும் இந்த பணிகள் மூலம் தற்போது உள்ள திறனைவிட 4 மடங்கு ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும் எனவும், சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ரயில் ஒன் செயலியால் செல்போனிலேயே பயணிகள் முன்பதிவு மற்றும் சாதாரண டிக்கெட்களை வாங்க முடியும் என்றும் கூறினார்.
Chennai [Madras],Chennai,Tamil Nadu
August 21, 2025 9:11 AM IST

