கணவன் மனைவிக்கு இடையே ஒரு நாளில் சில போன் கால்கள் செய்து பேசுவது வழக்கம். ஆனால், ஜப்பானைச் சேர்ந்த அந்த நபர், ஒரு நாளைக்கு 100 முறை தனது மனைவிக்கு வெவ்வேறு எண்களில் இருந்து அழைப்பதும், அழைப்பை ஏற்றதும் எதுவும் பேசாமல், அதனை துண்டிப்பதுமாக இருந்துள்ளார். முதலில் புதுபுது எண்களில் இருந்து யார் அழைப்பது என்றே தெரியாமல் அந்த பெண் குழம்பியுள்ளார். இதனால், அவர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
புகாரை பதிவு செய்த காவல்துறையினர் அது தொடர்பாக விசாரணை மேற்கொண்டுவந்தனர். அதேசமயம், அந்தப் பெண்ணும் தனக்கு வரும் அழைப்பு தொடர்பாக தீவிரமாக கவனிக்க துவங்கியுள்ளார். ஒரு கட்டத்தில் கணவர் வீட்டில் உறங்கிக் கொண்டிருக்கும்போது போன் அழைப்புகள் வராமல் இருப்பதை கண்டறிந்தார். இதன் மூலம், தன்னை நன்கு அறிந்தவர்களே இதனை செய்கிறார்கள் என்பதை யூகித்தார்.
அதேபோல், வீட்டில் இருக்கும்போதும் தொடர்ந்து செல்போன் அழைப்புகள் வந்தாலும், தன் கணவரின் போனை தான் உபயோகிக்கும்போது போன் வராமல் இருப்பதை கண்டறிந்தார். இதனால், அவர் தனது கணவரை தீவிரமாக கண்காணித்தார். அதன்படி, தன் கணவர் வீட்டில் உறங்கும்போதும், அவரின் போனை தான் உபயோகிக்கும் போதும் அழைப்புகள் வராததால், நிச்சயம் அவர் தான் ஏதோ செய்ய வேண்டும் என யூகித்த அந்த பெண் காவல்துறையில் அதனைத் தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள் :
16 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்கள் சோசியல் மீடியா உபயோகிக்க தடை – அரசு அதிரடி அறிவிப்பு
அதன்படி காவல்துறையினரும், அந்தப் பெண்ணின் கணவரை அழைத்து விசாரித்துள்ளனர். அப்போது, வெவ்வேறு எண்களில் இருந்து மனைவிக்கு ஒரு நாளில் 100க்கும் மேற்பட்ட கால்களை செய்தது அவர் தான் என்பதை ஒப்புக்கொண்டார். மேலும், காவல்துறையினர் ஏன் இப்படி வெவ்வேறு எண்களில் இருந்து உங்கள் மனைவிக்கு 100 முறைக்கும் மேல் போன் செய்கிறீர்கள் என விசாரித்தபோது, அவர் தன் மனைவியை அதிகமாக காதலிப்பதாகவும், அதன் காரணமாக இப்படி செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.
.
&w=750&resize=750,375&ssl=1)
