71
ஒரு சில பகுதிகளுக்கு நாளை (05) நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
அதற்கமைய ஜாஎல, கட்டுநாயக்க, சீதுவை நகரசபைக்குட்பட்ட பகுதிகள், கட்டான, மினுவாங்கொடை, ஜாஎல, கம்பஹா பிரதேசசபை க்குட்பட்ட பகுதிகளுக்கு நீர் விநியோகம் இடைநிறுத்தப்படவுள்ளது.
நாளை (05) பி.ப. 6.00 மணி முதல் நாளை மறுதினம் (06) காலை 6.00 மணி வரையான 12 மணித்தியாலங்களுக்கு இவ்வாறு நீர் விநியோகம் தடைப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


