Last Updated:
சிறுமி பெற்றெடுக்கும் குழந்தையைத் தத்தெடுப்பிற்காகக் கொடுக்கலாம் என்ற வாதத்தையும் நிராகரித்த நீதிபதிகள், சிறுமியின் விருப்பங்களையும் நலனையும் மீற முடியாது எனத் திட்டவட்டமாகக் கூறினர்.
ஒரு பெண்ணை, குறிப்பாக சிறுமியை அவரது விருப்பத்தை மீறி குழந்தையை கருவில் சுமக்க எந்தவொரு நீதிமன்றமும் கட்டாயப்படுத்த முடியாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதிகள் பி.வி.நாகரத்னா மற்றும் உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய அமர்வு, 7 மாத கர்ப்பிணியான 15 வயது சிறுமிக்கு மருத்துவ ரீதியாகக் கருவைக் கலைத்துக் கொள்ள அனுமதி அளித்தது.
ஒரு பெண்ணின் இனப்பெருக்க விருப்பத்திற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என அறிவுறுத்திய நீதிபதிகள், அரசியலமைப்பின் 21-ஆவது பிரிவின் கீழ் இனப்பெருக்கம் சார்ந்த விஷயங்களில் முடிவெடுக்கும் உரிமை என்பது தனிநபர் சுதந்திரம் மற்றும் தனியுரிமையின் ஒருங்கிணைந்த பகுதி எனக் குறிப்பிட்டனர்.
ஒரு சிறுமியை விரும்பத்தகாத கர்ப்பத்தைத் தொடரக் கட்டாயப்படுத்துவது அவரது அரசியலமைப்பு உரிமைகளை மீறுவது எனவும், அது மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
மேலும், சிறுமி பெற்றெடுக்கும் குழந்தையைத் தத்தெடுப்பிற்காகக் கொடுக்கலாம் என்ற வாதத்தையும் நிராகரித்த நீதிபதிகள், சிறுமியின் விருப்பங்களையும் நலனையும் மீற முடியாது எனத் திட்டவட்டமாகக் கூறினர்.
Delhi,Delhi,Delhi


