யாழ். மாவட்டத்தில் தொடர்ந்தும் இஞ்சியின் விலை உச்சநிலையில் காணப்படுகின்றது என வியாபாரிகள் தெரிவித்துளளனர்.
யாழ். மாவட்டத்தின் முக்கியமான சந்தைகளில் ஒன்றான திருநெல்வேலிப் பொதுச் சந்தையில் தற்போது ஒரு கிலோ இஞ்சி 5,000 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றது. இவ்வாறு தொடர் விலை அதிகரிப்புக்கு, இஞ்சி வரத்துக் குறைந்தமையே காரணமென வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, கடும் விலை அதிகரிப்புக் காரணமாக வழமையாக இஞ்சி விற்பனையில் ஈடுபடும் பல வர்த்தக நிலையங்களில் தற்போது இஞ்சி விற்பனையைக் காண முடியவில்லை. சில வர்த்தக நிலையங்களில் ஒரு கிலோ இஞ்சி 5,000 ரூபாவாத் தாண்டி விற்பனை செய்யப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
கோப்பாய் குறூப் நிருபர்


