நிகில் காமத்தின் குழந்தைப் பருவம் பழைய செல்போன்களை சேகரிப்பது, அதை வைத்து வர்த்தகம் செய்வது என கழிந்தது. ஆனால், அதன் மூலம் பெரும் பணத்தை இழந்தார். அதோடு சேர்த்து பள்ளிப் படிப்பும் பாதியில் நின்று போகவே, வாழ்க்கையின் பல உயர்வு, தாழ்வுகளை சிறு வயதிலேயே அனுபவித்தார் நிகில்.
ஜே.பி.நகரில் உள்ள ஆக்ஸ்போர்டு சீனியர் செகண்டரி பள்ளியில் பல ஆண்டுகள் கழித்த பிறகு, (இங்கிலாந்தில் உள்ள பிரபலமான ஆக்ஸ்போர்டுக்கும், இதற்கும் எந்த தொடர்பும் இல்லை என காமத் அடிக்கடி நகைச்சுவையாக சுட்டிக்காட்டுவார்) தொழில்முறை செஸ் போட்டிகளில் கவனம் செலுத்த முடிவு செய்தார். மாவட்ட மற்றும் மாநில அளவில் சிறப்பாக போட்டியிட்டாலும், அவரால் ஒருபோதும் உயர்மட்டத்தை எட்ட முடியவில்லை.
அதனால், பள்ளியை விட்டு ஓடிப்போய் ஒரு நண்பருடன் செல்போன் வர்த்தக தொழிலைத் தொடங்கினார். தன்னிடம் எப்போதும் இயல்பான தொழில்முனைவோர் உந்துதல் இருந்ததாகக் கூறுகிறார் காமத். இறுதியில், விரைவான மற்றும் அதிக வருமானத்தின் வசீகரத்தால் ஈர்க்கப்பட்டு, பங்கு வர்த்தகத்தில் தனது கவனத்தைத் திருப்பினார்.
அவர் ஒரு கால் சென்டரில் பணியில் சேர்ந்தார். அதே நேரத்தில் பங்குச்சந்தையில் வர்த்தகமும் செய்து, பணம் சம்பாதிப்பதும், இழப்பதும் என அவரது வாழ்க்கை சென்று கொண்டிருந்தது. இவர் இந்தியாபுல்ஸ் செக்யூரிட்டீஸ் நிறுவனத்திலும் பணியாற்றியுள்ளார். “என்னிடம் பட்டப்படிப்போ அல்லது எந்த தகுதியும் இல்லாமல் இந்தியாபுல்ஸில் வேலைக்காக நேர்காணலுக்குச் சென்றேன். எப்படியோ அங்கு வேலைக்கு சேர்ந்து, ஒரு மாதத்திற்கு ரூ.50,000 பெறுமானமுள்ள வாடிக்கையாளர்களின் பணத்தை நிர்வகிக்கும் பொறுப்பை பெற்றேன். அந்தப் பதவி எனக்குக் கிடைத்தது மிகவும் ஆச்சரியமாக இருந்தது” என்கிறார் நிகில் காமத்.
இதையும் படிக்க: உங்கள் கிரெடிட் கார்டு புள்ளிகளை எவ்வாறு மீட்டெடுப்பது…? நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய 3 வழிகள்…
நிகில் காமத், தனது மூத்த சகோதரர் நிதின் காமத்துடன் சேர்ந்து 2010ம் ஆண்டு தரகு நிறுவனமான ஜெரோதாவை தொடங்கி, இணை நிறுவனர் ஆனார். ஜெரோதாவைத் தவிர, ட்ரூ பீக்கன் மற்றும் க்ருவாஸ் போன்ற பிற தொழில் முயற்சிகளிலும் நிகில் ஈடுபட்டுள்ளார். பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்ட ஜெரோதா, 10 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களுக்கு சேவையாற்றி வருகிறது. இன்று இந்தியாவின் மிகப்பெரிய தரகு நிறுவனங்களில் ஒன்றாக ஜெரோதா உள்ளது.
இதையும் படிக்க: ரூ.45,000 அடிப்படை சம்பளம் வாங்கும் பணியாளருக்கு 6.5 ஆண்டுகள் கழித்து கிடைக்கும் கிராஜுவிட்டி எவ்வளவு தெரியுமா?
2024ம் ஆண்டு ஃபோர்ப்ஸ் உலக பில்லியனர்கள் பட்டியலில் காமத் இடம்பெற்றார். அவரது சொத்து மதிப்பு 3 பில்லியன் அமெரிக்க டாலர் ஆகும். அவரது சகோதரர் நிதினும், ஃபோர்ப்ஸின் 2024-ம் ஆண்டு வெளியிட்ட இந்தியாவின் 100 பணக்காரர்களின் பட்டியலில் இடம்பெற்றார். ஜெரோதாவின் தலைமை நிதி அதிகாரியான நிகில், ஃபேஷன், அழகு மற்றும் வீட்டுத் துறைகள் போன்ற தொழில்களில் 22 வயதுக்கு உட்பட்ட தொழில்முனைவோருக்கு உதவ WTF நிதியை நிறுவினார். 2024ம் நிதியாண்டில், ஜெரோதா நிறுவனம் மொத்தம் ரூ.5.6 லட்சம் கோடி சொத்துக்களை நிர்வகித்து, ரூ.4,700 கோடிக்கும் அதிகமான லாபத்தைப் பதிவு செய்துள்ளது.
February 14, 2025 7:06 PM IST

