• Login
Monday, September 21, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

ஒரு இன்ச் கூட நகர முடியாது.. ஈரான் விமானங்களுக்கு மூடுவிழா.. அமெரிக்கா வெளியிட்ட அறிவிப்பால் பரபரப்பு! | “No Fuel, No Landing, No Tickets”: US Imposes Severe Global Aviation Embargo on Iran – Scott Bessent Warns Foreign Airports

GenevaTimes by GenevaTimes
September 21, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
ஒரு இன்ச் கூட நகர முடியாது.. ஈரான் விமானங்களுக்கு மூடுவிழா.. அமெரிக்கா வெளியிட்ட அறிவிப்பால் பரபரப்பு! | “No Fuel, No Landing, No Tickets”: US Imposes Severe Global Aviation Embargo on Iran – Scott Bessent Warns Foreign Airports
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஒரு இன்ச் கூட நகர முடியாது.. ஈரான் விமானங்களுக்கு மூடுவிழா.. அமெரிக்கா வெளியிட்ட அறிவிப்பால் பரபரப்பு!

அமெரிக்கா – ஈரான் மத்தியிலான போரை ராணுவ தாக்குதல் மூலம் அல்லாமல் பொருளாதார, வர்த்தக தடைகள் மூலம் ஈரானை முடக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. இதில் முதல் ஆக்ஷனாக, உலக நாடுகள் இனி ஈரான் விமானங்களுக்கு எவ்விதமான சேவையும், உதவியும் செய்யக்கூடாது என அமெரிக்க கருவூல அமைப்பின் செயலாளர் ஸ்காட் பெசென்ட் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக ஈரானின் முக்கிய நடப்பு நாடாக சீனாவுக்கு கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது. ஸ்காட் பெசென்ட் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், உலகளாவிய விமான நிலையங்கள், நிறுவனங்கள், வர்த்தக அமைப்புகள் செப்டம்பர் 23ஆம் தேதி முதல் ஈரான் விமானங்களுக்கும், ஈரான் விமான நிறுவனங்களுக்கும் எவ்விதமான உதவியும் செய்யக்கூடாது என தெரிவித்துள்ளது.

 ஒரு இன்ச் கூட நகர முடியாது.. ஈரான் விமானங்களுக்கு மூடுவிழா.. அமெரிக்கா வெளியிட்ட அறிவிப்பால் பரபரப்பு!

அதாவது ஈரான் விமானங்களுக்கு எரிபொருள் உதவி, விமானங்களுக்கு லேண்டிங் மற்றும் டேக்ஆஃப் சேவைகள், ஈரான் விமானங்களுக்கு டிக்கெட் விற்பனை சேவை என எதுவும் வழங்கக்கூடாது என அமெரிக்காவின் இரண்டாம் நிலை தடைகள் மூலம் இந்த கட்டுப்பாட்டை விதித்துள்ளது என ஸ்காட் பெசென்ட் தெரிவித்துள்ளார்.

செப்டம்பர் 23ஆம் தேதிக்கு பின்பு ஈரான் விமானங்களுக்கு ஏதேனும் சேவை அளித்தால் அந்த நாட்டை அமெரிக்காவின் டாலர் நிதி பரிமாற்ற சந்தையில் இருந்து தடை செய்யப்படும் என ஸ்காட் பெசென்ட் எச்சரித்துள்ளார்.

உலகளவில் பெரும்பாலான நிதி பரிமாற்றங்கள் அனைத்தைும் டாலரில் வாயிலாக மட்டுமே நிதி பரிமாற்றம் செய்யப்படும் வேளையில், இந்த அமைப்பில் இருந்து தடை செய்யப்பட்டால் உலக நாடுகளுடனான தொடர்பை இழப்பது போன்றாகிவிடும். இதை அடிப்படையாக கொண்டே டிரம்ப் அரசு ஈரான் மீது மிக கடுமையான பொருளாதார தடையை விதித்துள்ளது.

ஸ்காட் பெசென்ட் தனது அறிவிப்பில் ஈரானுடன் மிகவும் நெருக்கமான நட்புறவை கொண்டு இருக்கும் சீனா இந்த புதிய கட்டுப்பாடுகளுக்கு ஏற்ப இணங்கி நடக்கும் என தெரிவித்தார். இந்த அறிவிப்பை ஸ்காட் பெசென்ட் சீனாவின் துணை தலைவர் He Lifeng மற்றும் சீனாவின் மத்திய வங்கியான People’s Bank of China கவர்னர் Pan Gongsheng ஆகியோரை சந்தித்த பின்பு தெரிவித்துள்ளார்.

மேலும் சீனா உயர்மட்ட அதிகாரிகளை சந்தித்த பின்பு ஸ்காட் பெசென்ட் செய்தியாளர்களிடம் பேசிய போது ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் பொருளாதாரத்தை முடக்க எடுக்கப்பட்டு இருக்கும் நடவடிக்கைகளில் சீன ஒத்துழைப்பு அளித்து வருகிறது என தெரிவித்தார்.

இதன் மூலம் செப்டம்பர் 23 ஆம் தேதி முதல் ஈரான் விமானங்கள் சர்வதேச வான்வெளியில் பறக்க முடியாமல் முடங்க கூடும்.

Share This Article

English summary

“No Fuel, No Landing, No Tickets”: US Imposes Severe Global Aviation Embargo on Iran – Scott Bessent Warns Foreign Airports

“No Fuel, No Landing, No Tickets”: US Imposes Severe Global Aviation Embargo on Iran – Scott Bessent Warns Foreign Airports — ஒரு இன்ச் கூட நகர முடியாது.. ஈரான் விமானங்களுக்கு மூடுவிழா.. அமெரிக்கா வெளியிட்ட அறிவிப்பால் பரபரப்பு!

Story first published: Monday, September 21, 2026, 21:21 [IST]

Other articles published on Sep 21, 2026

Read More

Previous Post

மத்தியப் பிரதேசத்தில் சிம்கார்டு மோசடி: 25 இணைப்புகள் முடக்கம், கருப்புப் பட்டியலில் விற்பனையாளர் . | India News (இந்தியா செய்திகள்)

Next Post

நீரில் மூழ்கிய லிங்கி பாலம்: போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் 600 ஒராங் அஸ்லி மக்கள் பாதிப்பு! | Makkal Osai

Next Post
நீரில் மூழ்கிய லிங்கி பாலம்: போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் 600 ஒராங் அஸ்லி மக்கள் பாதிப்பு! | Makkal Osai

நீரில் மூழ்கிய லிங்கி பாலம்: போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் 600 ஒராங் அஸ்லி மக்கள் பாதிப்பு! | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin