Last Updated:
டாஸில் வர்ணனை செய்த முரளி கார்த்திக்கை பார்த்து நீங்கள் டாஸ் போடுவதற்கு அதிகம் வர வேண்டும் என்று கிண்டலாக கூறினார்.
தொடர்ச்சியாக 20 ஒருநாள் போட்டிகளில் டாஸில் தோல்வி அடைந்து வந்த இந்திய அணி இன்று தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3ஆவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்று பவுலிங்கை தேர்வு செய்தது.
இந்திய அணி டாஸ் வென்றதை ரசிகர்களும், கேப்டன் கே.எல்.ராகுலும் கொண்டாடியுள்ளனர். தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது.
முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றிருந்த நிலையில் 2 ஆவது போட்டியை தென்னாப்பிரிக்கா வென்றது. இதையடுத்து தொடர் வெற்றியை தீர்மானிக்கும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெற்று வருகிறது.
போட்டி தொடங்குவதற்கு முன்னதாக டாஸ் போடப்பட்டபோது காயின்ஸை ராகுல் சுண்டினார். தென்னாப்பிரிக்கா கேப்டன் தலை என்று கேட்டபோது, டெய்ல் விழுந்ததை தொடர்ந்து, டாஸில் வென்றது இந்திய அணி.
அதன்பின்னர் பேசிய ராகுல் முதலில் பவுலிங் செய்யவுள்ளதாக தெரிவித்தார். மேலும், டாஸ் நிகழ்வை தொகுத்து வழங்கிய முரளி கார்த்திக்கை பார்த்து நீங்கள் டாஸ் போடுவதற்கு அதிகம் வர வேண்டும் என்று கிண்டலாக கூறினார்.
இது தொடர்பாக பிசிசிஐ வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று இணையத்தில் லைக்ஸ்களை குவித்து வருகிறது.
December 06, 2025 7:31 PM IST


