Last Updated:
இஸ்ரேல் ராணுவம், தனது படைகளை காசாவில் இருந்து வாபஸ் பெறும்.
காசாவுக்குள் உணவு, மருந்து, எரிபொருள் போன்ற மனிதாபிமான உதவிகள்
தடையின்றி செல்வதற்கு வழி வகுக்கப்படும்.
காசா அமைதி ஒப்பந்தத்தின் முதல் கட்டத்திற்கு இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் ஒப்புதல் அளித்துள்ளதாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இஸ்ரேல் பிணைக் கைதிகளை ஹமாசும், பாலஸ்தீனிய கைதிகளை விடுவிக்க இஸ்ரேலும் ஒப்புக்கொண்டுள்ளன.
காசா மீதான தாக்குதலை இஸ்ரேல் தொடங்கி 3 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இஸ்ரேல் தாக்குதலில் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனிய மக்கள் பலியாகியுள்ளனர்.. போரை நிறுத்த 20 அம்ச திட்டங்களை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அண்மையில் அறிவித்திருந்தார். சமாதானத் திட்டத்தின் முதல் கட்டத்திற்கு இஸ்ரேலும் ஹமாஸும் ஒப்புக்கொண்டுள்ளதாக டிரம்ப் அறிவித்துள்ளார்.
இதன் படி இஸ்ரேல் பிணைக்கைதிகளை விடுவிக்க ஹமாஸ் ஒப்புக்கொண்டதாகவும், இதற்கு பதிலாக பாலஸ்தீனிய கைதிகளை இஸ்ரேல் விடுவிக்கும் என்றும் டிரம்ப் உறுதியளித்துள்ளார்… இந்த விவகாரம் குறித்து ஆலோசிக்க ஞாயிற்றுக் கிழமை எகிப்து செல்ல உள்ளதாகவும் டிரம்ப் தெரிவித்தார்…
ஹமாஸ் இந்த ஒப்பந்தத்தை உறுதிப்படுத்தியவுடன் போர் நிறுத்தம் உடனடியாக அமலுக்கு வரும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஹமாஸ் வசம் உள்ள எஞ்சியிருக்கும் அனைத்து பிணைக்கைதிகளும் (Hostages), உயிருடன் இருப்பவர்களும், இறந்தவர்களின் உடல்களும் 72 மணி நேரத்திற்குள் ஒப்படைக்கப்படும். இதற்கு ஈடாக, இஸ்ரேல் சிறைகளில் உள்ள பாலஸ்தீன கைதிகளை விடுவிப்பார்கள். முதுற்கட்ட தகவல்களின்படி, ஹமாஸ் 20 உயிருள்ள பிணைக்கைதிகளை விடுவித்தால், 250 ஆயுள் தண்டனை பெற்றவர்கள் உட்பட 2,000 பாலஸ்தீன கைதிகளை இஸ்ரேல் விடுவிக்கும்..
இஸ்ரேல் ராணுவம், தனது படைகளை காசாவில் இருந்து வாபஸ் பெறும்.
காசாவுக்குள் உணவு, மருந்து, எரிபொருள் போன்ற மனிதாபிமான உதவிகள்
தடையின்றி செல்வதற்கு வழி வகுக்கப்படும். இந்த போர் நிறுத்தத்தை இஸ்ரேல் மக்கள் வரவேற்றுள்ளனர். தங்களது உறவினர்கள் மீண்டும் பார்ப்பது மிகந்த மகிழ்ச்சியை தருவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
போரை உடனடியாக முடிவுக்கு கொண்டு வர எகிப்து, கத்தார் மற்றும் அமெரிக்காவின் மத்தியஸ்தத்துடன் அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. 2023- ஆம் ஆண்டு நவம்பர் மாதமும் நான்கு நாள் தற்காலிக போர் நிறுத்தம் நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆனால், இஸ்ரேல் ராணுவம் திடீரென தாக்குதல் நடத்தியதால், மீண்டும் பதற்றம் ஏற்பட்டது. தற்போதைய ஒப்பந்தம் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான நீண்ட காலத் திட்டத்தின் முதல் படியாக இருக்கும் என்று நம்பப்படுகிறது..
October 09, 2025 1:04 PM IST
ஒப்பந்தம் கையெழுத்தானது… இஸ்ரேல் – ஹமாஸ் போர் முடிவுக்கு வருகிறது – அதிபர் டிரம்ப் அறிவிப்பு


