கேள்வி:- தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கையை அறிவிக்க வேண்டும் என மத்திய அரசு கூறி உள்ளதே?
அண்ணா வழியில் அதிமுக அரசு இருமொழிக் கொள்கையை கடைப்பிடித்து வருகிறது. ஒரு மொழியை விரும்பி யார் வேண்டுமானாலும் கற்கலாம். ஆனால் ஒரு மொழியை யாரும் திணிக்க கூடாது. ஆங்கிலம் இணைப்பு மொழியாக உள்ள சூழல் உள்ளது. தமிழ் தாய் மொழியாக உள்ளது. தாய் மொழி எந்த நிலையும் அழியக் கூடாது என்பதற்காக மொழிப்போராட்டம் நடைபெற்றது. பாலுக்கும் காவலன்; பூனைக்கும் தோழன் என்பதாக திமுக அரசின் நிலைப்பாடு இதில் உள்ளது. எல்.முருகன் 11லட்சம் கோடி கொடுத்ததாக கூறுகிறார். அது மக்கள் செலுத்தும் வரிப்பணம் தானே. உத்தரப்பிரதேசம், பீகார், ஒரிசா, ஹரியானா உள்ளிட்ட வடமாநிலங்களுக்கு பாஜக அரசு எவ்வளவு கொடுத்தது என்று சொல்ல முடியுமா?