ஒக்டோபர் மாதத்தின் முதல் 25 நாட்களில் 136,093 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
அதிகார சபை வெளியிட்டுள்ள அண்மைய தரவுகளின்படி, குறித்த காலப்பகுதியில் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ளனர்.
இதன்படி, இந்தியாவிலிருந்து 51,424 பேர் வருகை தந்துள்ளதுடன், இது மொத்த சுற்றுலாப் பயணிகளின் வருகையில் 38 சதவீதமாகும்.
இலங்கைக்கு வருகை
மேலும், ஒக்டோபர் முதலாம் திகதி முதல் 25ஆம் திகதி வரையான காலப்பகுதியில் ஐக்கிய இராச்சியத்திலிருந்து 10,117 பேரும், சீனாவிலிருந்து 9,411 பேரும் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

இதற்கிடையில், 2026 ஜனவரி முதலாம் திகதி முதல் ஒக்டோபர் 25ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்த மொத்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,829,772 ஆகப் பதிவாகியுள்ளது.
குறித்த காலப்பகுதியில் இந்தியாவிலிருந்து 488,838 பேரும், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 170,844 பேரும் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

