• Login
Saturday, August 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

ஐ.நா கூட்டத்தில் முகமது யூனுஸ் பங்கேற்க எதிர்ப்பு: நியூயார்க்கில் வங்கதேசத்தினர் போராட்டம் | Bangladesh protest in New York against Mohammed Yunus’ participation in the UN General Assembly

GenevaTimes by GenevaTimes
September 24, 2024
in உலகம்
Reading Time: 5 mins read
0
ஐ.நா கூட்டத்தில் முகமது யூனுஸ் பங்கேற்க எதிர்ப்பு: நியூயார்க்கில் வங்கதேசத்தினர் போராட்டம் | Bangladesh protest in New York against Mohammed Yunus’ participation in the UN General Assembly
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


நியூயார்க் (அமெரிக்கா): ஐக்கிய நாடுகள் பொதுச் சபை கூட்டத்தில் வங்கதேசத்தின் பிரதிநிதியாக அந்நாட்டின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் பங்கேற்க எதிர்ப்பு தெரிவித்து வங்கதேச மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வங்கதேசத்தில் ஏற்பட்ட மாணவர் போராட்டத்தை அடுத்து, அந்நாட்டின் பிரதமர் ஷேக் ஹசீனா பதவியை ராஜினமா செய்துவிட்டு இந்தியாவுக்கு தப்பி வந்தார். இதையடுத்து, அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ், வங்கதேசத்தின் தலைமை ஆலோசகராக பதவியேற்றார்.

நியூயார்க்கில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் வங்கதேசத்தின் சார்பில் பங்கேற்க முகமது யூனுஸ் வந்துள்ள நிலையில், அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து ஏராளமான வங்கதேசத்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஷேக் ஜமால் ஹுசைன் கூறுகையில், “டாக்டர் முகமது யூனுஸ் அரசியல் சாசனத்திற்கு விரோதமாக, சட்ட விரோதமாக அதிகாரத்தை கைப்பற்றியவர். கறைபடிந்த அரசியலுடன் ஆட்சியை கைப்பற்றியுள்ளார். இதனால், ஏராளமானோர் கொல்லப்பட்டுள்ளனர். வங்கதேச மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் ஷேக் ஹசீனா ராஜினாமா செய்யவில்லை. நாங்கள் ஐ.நா.வை பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம். முகமது யூனுஸ் இங்கு வங்கதேச மக்களை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை” என தெரிவித்தார்.

போராட்டத்தில் ஈடுபட்ட டி.எம். ரொனால்ட் என்பவர், “நாங்கள் மதச்சார்பற்ற ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்டுள்ளோம். முகமது யூனுஸ் அதிகாரத்தை வலுக்கட்டாயமாக கைப்பற்றிய பிறகு, அவர் இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்களை கொல்ல தொடங்கினார். வங்கதேசத்தில் எங்கள் மக்கள் பாதுகாப்பாக இல்லை” எனக் குற்றஞ்சாட்டினார்.

ஆர்ப்பாட்டத்தில் பேசிய டாக்டர் ரஹ்மான், “11.7 கோடி வங்கதேச மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டவிரோத, தேர்ந்தெடுக்கப்படாத நபருக்கு எதிர்ப்பு தெரிவிக்கவே நான் இங்கு வந்துள்ளேன். அவர் தேர்ந்தெடுக்கப்படவில்லை. அவர் மாணவர்களால் நியமிக்கப்பட்டவர். சிறுபான்மையினர் அல்லது யாரைப் பற்றியும் அவருக்கு அக்கறை இல்லை. அவர் சட்டவிரோதமாக நாட்டை ஆக்கிரமித்துள்ளார்” எனக் குறிப்பிட்டார்.



Read More

Previous Post

அமெரிக்காவில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் பிரதமர் மோடி சந்திப்பு | PM Modi meets Ukrainian President Zelenskyy before leaving U.S.

Next Post

ஸ்பேஸ் எக்ஸ் மூலம் செவ்வாய் கிரகத்துக்கு ஆளில்லா விண்கலன்: எலான் மஸ்கின் பலே திட்டம் | uncrewed spacecraft to sent Mars by SpaceX Elon Musk plans

Next Post
ஸ்பேஸ் எக்ஸ் மூலம் செவ்வாய் கிரகத்துக்கு ஆளில்லா விண்கலன்: எலான் மஸ்கின் பலே திட்டம் | uncrewed spacecraft to sent Mars by SpaceX Elon Musk plans

ஸ்பேஸ் எக்ஸ் மூலம் செவ்வாய் கிரகத்துக்கு ஆளில்லா விண்கலன்: எலான் மஸ்கின் பலே திட்டம் | uncrewed spacecraft to sent Mars by SpaceX Elon Musk plans

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin