[ad_1]
கோலாலம்பூர்:
2025-ஆம் ஆண்டிற்கான, ஐ.எம்.டி உலகத் திறனாளர் தரவரிசையில் (IMD World Talent Ranking), மலேசியா, எட்டு இடங்கள் முன்னேறி, 25-வது இடத்தைப் பிடித்துள்ளது.
கடந்த ஐந்து ஆண்டுகளில், இது, நாட்டின், சிறந்த செயல்திறனைக் காட்டுகிறது. இது, கல்வி முதலீடு, திறன்களுக்கான தயார்நிலை, திறனாளர்களைத் தக்கவைத்தல் ஆகியவற்றில், மலேசியாவின் முன்னேற்றத்தைப் பிரதிபலிக்கிறது.
தென்கிழக்கு ஆசியாவில், சிங்கப்பூருக்குப் (7-ஆம் இடம்) பிறகு, மலேசியா, இரண்டாவது இடத்தில் உள்ளது. தாய்லாந்து (43-ஆம் இடம்), இந்தோனேசியா (53-ஆம் இடம்), பிலிப்பைன்ஸ் (64-ஆம் இடம்) ஆகிய நாடுகளை விட, மலேசியா, சிறந்த இடத்தைப் பிடித்துள்ளது.
ஆசிய பசிபிக் பிராந்தியத்தில், மலேசியா, ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது. இது, ஊழியர்களின் வலுவான உந்துதல், வெளிநாட்டுத் தொழில் வல்லுநர்களை ஈர்க்கும் திறன் ஆகியவற்றால், சாத்தியமானது.
இருப்பினும், கல்விச் செலவினம், தொழிற்பயிற்சிகள், அறிவியல், தொழில்நுட்ப பட்டதாரிகளின் எண்ணிக்கை, வாழ்க்கைச் செலவினம் போன்றப் பகுதிகளில், மலேசியாவுக்குச் சவால்கள் உள்ளன.
இதனிடையே, இந்த முன்னேற்றம், மனித மூலதனத்தை உருவாக்குவதில், அரசாங்கத்தின், வலுவான, பயனுள்ள கொள்கைகளைக் காட்டுகிறது. இது உள்கட்டமைப்பு மேம்பாடுகள், அனைத்துலகத் திறனாளர்களை ஈர்க்கும் வகையில், மலேசியாவின் கவர்ச்சியை, மேலும், அதிகரித்துள்ளன.