ஐரோப்பாவில் சில பகுதிகளில் அவசரநிலை அறிவிக்கப்பட்டு மருத்துவமனைகள் முன்னெச்சரிக்கை நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
புலம்பெயர் நாடுகளின் வாழும் தமிழ் மூதாளர்கள் உட்பட்ட மூதாளர்கள் மற்றும் சிறார்கள் உட்பட்ட அனைவருக்கும் கடும் வெப்பம் காரணமாக ஏற்படக்கூடிய உடல் உபாதைகள் குறித்த எச்சரிக்கைகள் விடப்பட்டுள்ளன.
இந்தநிலையில், இயன்றவரை அதிக சூரிய ஒளியில் வெளியே நடமாடாமல் இருக்கும் படி அறிவுறுத்தபட்டுள்ளது.
வெப்பநிலை
பிரித்தானியாவில் லண்டன் உடபட்ட நகரங்களின் வெப்பநிலை 34 பாகை செல்சியலை அண்மித்து பதிவாகிவரும் நிலையில் அங்கும் சுகாதார எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.

பிரான்சில் இன்று நாடாளவிய ரீதியில் வெப்பநிலை 34 பாகை செல்சியஸைத் தாண்டி உயர்ந்துவருவதால் முன்னெச்சரிக்கையாக, 200 இற்கும் மேற்பட்ட பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
வெப்பத்தாக்கம் குறித்த மக்கள் மிகவும் விழிப்புடன் இருக்குமாறு அதிகாரிகளால் அறிவுறுத்தப்பட்டு வருகின்றது.
வெப்ப அலை எச்சரிக்கை
தலைநகர் பரிஸ் உட்பட்ட இல்-து-பிரான்ஸ் பிராந்தியம் உட்பட நாடளாவிய ரீதியில் 84 பிராந்தியங்களுக்கு இன்றும் நாளையும் வெப்ப அலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நெருக்கமான சிறைச்சாலைகளுக்கு சிறப்பு வெப்ப செயல்படுத்தப்பட்டு சில சிறைசாலைகளில் இருந்து கைதிகள் அவசரமாக இடம்மாற்றப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தலைநகர் பரிஸ் உட்பட்ட இல்-து-பிரான்சில், சில வீதிகளுக்கு இன்று வேகம் கட்டுப்பாடு விதிக்கபட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
அதிக வெப்பம் காரணமாக தொடருந்து போக்குவரத்து திட்டங்களில் மாற்றங்கள் இருக்கும் என்ற எச்சரிக்கைகளும் விடுக்கபட்டுள்ளன.
அதிக வெப்பம்
ஸ்பெயின், போத்துக்கல் மற்றும் இத்தாலியும் வெப்ப அலையால் பாதிக்கப்பட்டுள்ளன ஸ்பெயினில் ஏற்கனவே 46 பாகை செல்சியஸ் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இத்தாலியில், மிலான், நேபிள்ஸ், வெனிஸ், புளோரன்ஸ் மற்றும் ரோம் உள்ளிட்ட 21 நகரங்கள் எச்சரிக்கையில் வைக்கபட்டு சுற்றுலா தலங்களுக்கு அருகில் நோயாளர் காவுவண்டிகள்; நிறுத்தப்பட்டுள்ளன.

ரோமில், 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு நீச்சல் குளங்கள் இலவசமாக திறந்துவிடப்பட்டுள்ளன.
வட ஆப்பிரிக்காவில் இருந்து நகர்ந்த வெப்பக் காற்று, பால்கன் பிராந்தியம் முழுவதும் பரவிவியதால் இந்த வெப்பம் நிலவிவருவது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |