Last Updated:
அமெரிக்கா அதிபர் டிரம்ப், ஐரோப்பிய ஒன்றியத்துடன் மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தம் செய்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்துடன் மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தம் செய்துள்ளதாக அமெரிக்கா அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபராக டிரம்ப் இரண்டாவது முறையாக பதவியேற்ற பிறகு, பல்வேறு நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொண்டு வருகிறார். இதில், ஜப்பான், இந்தோனேஷியா உள்ளிட்ட நாடுகளுடன் உடன்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், ஸ்காட்லாந்தில் ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் உடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்தினார். அதைத்தொடர்ந்து, அமெரிக்கா – ஐரோப்பிய ஒன்றியம் இடையே மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக டிரம்ப் அறிவித்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 15 விழுக்காடு வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் தெரிவித்துள்ளார். இதன்மூலம் ஐரோப்பிய நாடுகளில் இருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் கார்கள், மருந்து பொருட்கள், செமிகண்டக்டர் உள்ளிட்டவைகளுக்கு 15 விழுக்காடு வரி விதிக்கப்பட உள்ளது.
வர்த்தக ஒப்பந்தத்தின்படி ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள 27 நாடுகள் 64 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான எரிசக்தியை அமெரிக்காவிடம் இருந்து கொள்முதல் செய்யும் என்றும் அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
July 28, 2025 3:17 PM IST
“ஐரோப்பிய ஒன்றியத்துடன் மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தம்..” அமெரிக்க அதிபர் டெனால்ட் டிரம்ப் அறிவிப்பு!