ஆர்சிபி அணியின் வெற்றி பற்றி பியூஷ் சாவ்லா கூறியதாவது: “ஆர்சிபி சிறப்பாக விளையாடிக்கொண்டிருக்கிறது, அதற்கு அணிக்கு முழு பாராட்டு சொல்ல வேண்டும். அவர்கள் பேட்டிங்கும், பவுலிங்கும் சிறப்பாக உள்ளது. பழைய பந்தை வைத்து புவனேஷ்வர் குமார் என்ன மாயாஜாலம் செய்வார் என்பதைக் பார்த்தோம். அவர் வீசிய இரண்டு ஓவர்களும் மிக முக்கியமானவை. முக்கிய விக்கெட்டுகளை எடுத்தார். கடினமான பீட்சில் சேஸிங் செய்யும்போது, விராட் கோலி மற்றும் க்ருனால் பாண்டியா ஆகியோரின் பார்ட்னர்ஷிப் முக்கியத்துவம் பெற்றது. அணி ஒரு கட்டத்தில் மிகவும் அழுத்தத்தில் இருந்தும், இந்த ஜோடி ஆட்டத்தை ஆழமாக எடுத்துச்சென்றனர்.

