• Login
Monday, August 17, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

ஐபிஎல் 2025: பஞ்சாப் கிங்ஸ் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் நியமனம்

GenevaTimes by GenevaTimes
February 18, 2025
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
ஐபிஎல் 2025: பஞ்சாப் கிங்ஸ் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் நியமனம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கடந்த ஆண்டு போன்று இந்த ஆண்டும் மொத்தம் 10 அணிகள் கோப்பைக்காக போட்டியிடுகின்றன. இருப்பினும் சில அணிகளின் கேப்டன்கள் இந்த முறை மாற்றப்பட்டுள்ளார்கள். கடந்த ஆண்டு கொல்கத்தா அணியின் கேப்டனாக செயல்பட்டு அந்த அணி கோப்பை வெல்வதற்கு முக்கிய காரணமாக இருந்த ஸ்ரேயாஸ் ஐயர் இந்த சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் ஐபிஎல் ஏலத்தில் 26 கோடியே 75 லட்ச ரூபாய்க்கு பஞ்சாப் அணியால் விலைக்கு வாங்கப்பட்டார் மும்பை. அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா தொடர்கிறார். சென்னை அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட், ராஜஸ்தான் அணியின் கேப்டனாக சஞ்சு சாம்சங் ஆகியோர் நீடிக்கின்றனர் அணிகள் வாரியாக பயிற்சியாளர் முதல் கேப்டன்கள் வரை இப்போது பார்க்கலாம்.

லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் – இந்த அணியின் கேப்டனாக ரிஷப் பந்த் நியமிக்கப்பட்டுள்ளார். 27 கோடி ரூபாய் கொடுத்து இவரை லக்னோ அணி விலைக்கு வாங்கியுள்ளது. ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் ஜஸ்டின் லாங்கர் பயிற்சியாளராகவும், ஜாகிர் கான் ஆலோசகராகவும் இந்த அணியில் உள்ளனர். இந்த ஐபிஎல் தொடரில் லக்னோ அணியில் விளையாடும் 11 வீரர்களாக ரிஷப் பந்த், அர்ஷின் குல்கர்னி, மிட்செல் மார்ஷ், நிக்கோலஸ் பூரன், டேவிட் மில்லர், ஐடன் மார்க்ரம், ஷாபாஸ் அகமது, ரவி பிஷ்னோய், மோஷின் கான், மயங்க் யாதவ், அவேஷ் கான் ஆகியோரை நாம் எதிர்பார்க்கலாம்.

ராஜஸ்தான் ராயல்ஸ் – இந்த அணியின் கேப்டனாக சஞ்சு சாம்சன் நீடிக்கிறார். இவர் ஐபிஎல் ஏலத்தில் 18 கோடி ரூபாய்க்கு விலைக்கு வாங்கப்பட்டார். ராஜஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் செயல்பட்டு வருகிறார். இந்த அணிக்கு ஆலோசகர் என யாரும் பொறுப்பு வகிக்கவில்லை.  இந்த ஐபிஎல் தொடரில் யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் (WK), நிதிஷ் ராணா, ரியான் பராக், துருவ் ஜூரல், ஷிம்ரோன் ஹெட்மியர், ஜோஃப்ரா ஆர்ச்சர், வனிந்து ஹசரங்கா, மகேஷ் தீக்ஷனா, சந்தீப் சர்மா, ஆகாஷ் மத்வால் ஆகிய 11 வீரர்கள் ஆடும் லெவனில் இடம்பெறக்கூடும். 2021 ஆம் ஆண்டிலிருந்து ராஜஸ்தான் அணியின் கேப்டனாக சஞ்சு சாம்சன் பொறுப்பில் இருந்து வருகிறார்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் சன்ரைசர்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். அவரை ரூ. 18 கோடி கொடுத்து சன்ரைசர்ஸ் அணி விலைக்கு வாங்கியது. அந்த அணியின் தலைமை பயிற்சியாளராக நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் டேனியல் வெட்டோரி உள்ளார். சன்ரைசர்ஸ் அணியில் டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா, இஷான் கிஷன், நிதிஷ் குமார் ரெட்டி, ஹென்ரிச் கிளாசென், அபினவ் மனோகர், சச்சின் பேபி, பாட் கம்மின்ஸ், முகமது ஷமி, ஹர்ஷல் படேல், ராகுல் சாஹர் ஆகிய வீரர்களை விளையாடும் லெவனில் நாம் எதிர்பார்க்கலாம். பாட் கம்மின்சை 18 கோடி ரூபாய் கொடுத்து சன்ரைசர்ஸ் அணி தக்க வைத்துக் கொண்டுள்ளது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – இந்த அணியின் புதிய கேப்டனாக ரஜத் பட்டிதார் நியமிக்கப்பட்டுள்ளார். ஜிம்பாப்வே அணியின் முன்னாள் வீரர் ஆன்டி ப்ளோர் பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார். ஆர்.சி.பி அணியில் ஆகிய பில் சால்ட், விராட் கோலி, லியாம் லிவிங்ஸ்டோன், தேவ்தத் படிக்கல், டிம் டேவிட், ரஜத் படிதார், க்ருனால் பாண்டியா, புவனேஷ்வர்வ் குமார், யாஷ் தயாள், ஜோஷ் ஹேசில்வுட், சுயாஷ் சர்மா வீரர்கள் ஆடும் 11-ல் இடம் பெறலாம். மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதாகும் ரஜப் பட்டிதார் 2021 ஆம் ஆண்டிலிருந்து ஆர்சிபி அணியில் விளையாடி வருகிறார்.

பஞ்சாப் கிங்ஸ் –  இந்த அணியின் கேப்டனாக நடப்பு சாம்பியன் கொல்கத்தா அணியில் கேப்டன் பொறுப்பு வகித்த ஸ்ரேயாஸ் ஐயர் பொறுப்பேற்றுள்ளார். பஞ்சாப் அணியின் பயிற்சியாளராக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் செயல்படுகிறார். இந்த ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியில் பிரப்சிம்ரன் சிங், மார்கஸ் ஸ்டோனிஸ், ஸ்ரேயாஸ் ஐயர், கிளென் மேக்ஸ்வெல், நேஹால் வதேரா, ஷஷாங்க் சிங், அஸ்மத்துல்லா ஓமர்சாய், ஹர்பிரீத் பிரார், மார்கோ ஜான்சன், அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல் ஆகிய 11 வீரர்கள் களமிறங்கலாம்.

மும்பை இந்தியன்ஸ் – இந்த அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா நீடிக்கிறார். அவரை 16 கோடியே 35 லட்ச ரூபாய் கொடுத்து மும்பை அணி தக்க வைத்து கொண்டுள்ளது. அந்த அணியின் தலைமை பயிற்சியாராக ஜெயவர்த்தனே செயல்பட்டு வருகிறார். நடப்பு ஐபிஎல் தொடரில் ரோஹித் சர்மா, வில் ஜாக்ஸ், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, நமன் திர், ரியான் ரிக்கல்டன், மிட்செல் சான்ட்னர், ஜஸ்பிரித் பும்ரா, டிரென்ட் போல்ட், தீபக் சாஹர் ஆகிய 11 வீரர்கள் மும்பை அணியின் ஆடும் லெவனில் இடம் பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – இந்த அணியின் புதிய கேப்டனாக வெங்கடேஷ் ஐயர் நியமிக்கப்பட்டுள்ளார். இவரை 23 கோடியே 75 லட்ச ரூபாய்க்கு அணி நிர்வாகம் தக்கவைத்துக் கொண்டுள்ளது. கொல்கத்தா அணியினர் தலைமை பயிற்சியாளர் சந்திரகாந்த் பண்டிட். கொல்கத்தா அணியுடைய ஆலோசகராக டுவேன் பிராவோ செயல்பட்டு வருகிறார். நடப்பு ஐபிஎல் தொடரில் குயின்டன் டி காக், சுனில் நரைன், வெங்கடேஷ் ஐயர், ஆங்க்ரிஷ் ரகுவன்ஷி, ரின்கு சிங், ஆண்ட்ரே ரஸ்ஸல், ராமன்தீப் சிங், ஹர்ஷித் ராணா, வருண் சக்கரவர்த்தி, ஸ்பென்சர் ஜான்சன், வைபவ் அரோரா ஆகிய 11 வீரர்கள் கொல்கத்தா அணியில் விளையாடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குஜராத் டைட்டன்ஸ் – சுப்மன் கில் இந்த அணியுடைய கேப்டனாக செயல்பட்டு வருகிறார். அவரை 16 கோடியே 50 லட்சம் ரூபாய்க்கு குஜராத் அணி தக்க வைத்துக் கொண்டுள்ளது. அந்த அணியின் தலைமை பயிற்சியாளராக ஆசிஷ் நெஹ்ரா நீடிக்கிறார், குஜராத் அணியில் ஷுப்மன் கில், ஜோஸ் பட்லர், சாய் சுதர்சன், மஹிபால் லோம்ரோர், க்ளென் பிலிப்ஸ், ஷாருக் கான், வாஷிங்டன் சுந்தர், ரஷித் கான், முகமது சிராஜ், ககிசோ ரபாடா, பிரசித் கிருஷ்ணா ஆகிய 11 வீரர்கள் இந்த ஐபிஎல் சீசனில் அதிக போட்டிகளில் விளையாடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டெல்லி கேபிட்டல்ஸ் – இந்த அணியின் கேப்டனாக கே.எல். ராகுல் அல்லது அக்சர் படேல் நியமிக்க படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹேமந்த் பதானி இந்த அணியின் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்றுள்ளார். நடப்பு ஐபிஎல் தொடரில் டெல்லி அணியில் ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க், கேஎல் ராகுல், அபிஷேக் போரல், ஹாரி புரூக், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், அக்சர் படேல், அசுதோஷ் சர்மா, மிட்செல் ஸ்டார்க், குல்தீப் யாதவ், டி நடராஜன், முகேஷ் குமார் ஆகிய 11 வீரர்கள் விளையாடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் – இந்த முறையும் கேப்டனாக ருத்ராஜ் கெய்க்வாட் நீடிக்கிறார். அவரை 18 கோடி ரூபாய் கொடுத்து சென்னை அணி நிர்வாகம் தக்க வைத்துக் கொண்டுள்ளது. தலைமை பயிற்சியாளராக ஸ்டீபன் பிளம்மிங் தொடர்கிறார். நடப்பு ஐபிஎல் தொடரில் ருதுராஜ் கெய்க்வாட், டெவோன் கான்வே, ரச்சின் ரவீந்திரா, ராகுல் திரிபாதி, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி, ஆர். அஷ்வின், மதீஷா பத்திரனா, கலீல் அகமது, நூர் அகமது ஆகிய 11 வீரர்கள் சிஎஸ்கே -வின் பெரும்பாலான போட்டிகளில் விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு சென்னை அணியில் கேப்டன்ஷிப் மாற்றம் நடந்தது. அப்போது எம்.எஸ். தோனி கேப்டன் பொறுப்பை ருதுராஜிடம் ஒப்படைத்தார்.

First Published :

February 18, 2025 4:20 PM IST

Read More

Previous Post

அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் கிறிஸ்டியன் மைக்கேல் ஜேம்ஸுக்கு ஜாமீன் | Christian Michel James gets bail in AgustaWestland chopper scam case

Next Post

கோவை சரவணம்பட்டியில் ஈரடுக்கு மேம்பாலம் அமைக்கிறது சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் | Double decker flyover in coimbatore saravanampatti

Next Post
கோவை சரவணம்பட்டியில் ஈரடுக்கு மேம்பாலம் அமைக்கிறது சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் | Double decker flyover in coimbatore saravanampatti

கோவை சரவணம்பட்டியில் ஈரடுக்கு மேம்பாலம் அமைக்கிறது சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் | Double decker flyover in coimbatore saravanampatti

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin