03
ஜோஸ் பட்லர்: கேப்டன்சிக்கு ஜோஸ் பட்லரும் நல்ல சாய்ஸ். பட்லர் ஏற்கனவே, இங்கிலாந்து வொயிட் பால் அணிகளுக்கு கேப்டனாக செயல்பட்டு வருகிறார். இந்த சகாப்தத்தின் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவர். அதற்கு சான்று ஐபிஎல்லில் அவர் விளையாடிய ஏழு சதங்கள். மேலும், கீப்பிங், ஓப்பனிங் பேட்ஸ்மேன் என அணிக்கு தேவையான பங்குகளை வழங்கக்கூடிய நபரும்கூட. இதுவரை ஐபிஎல் போட்டிகளில் 147 ஸ்ட்ரைக் ரேட்டில் 3,600 ரன்களுக்கு மேல் அடித்துள்ளார். 34 வயதான பட்லர் பல அணிகளின் இலக்காக இருப்பார். இதனால் ஏலத்தின் போது பட்லருக்காக அணிகள் ஒரு போரை நடத்தலாம்.


&w=1200&resize=1200,675&ssl=1)