சேப்பாக்கத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதும் போட்டி வரும் 5ஆம் தேதி பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்குகிறது. இதற்கான டிக்கெட் விற்பனை இன்று காலை 10.15 மணிக்கு ஆன்லைனில் தொடங்கும் என சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் அறிவித்துள்ளது.
2 டிக்கெட் மட்டுமே:
www.chennaisuperkings.com என்ற இணையதளம் வாயிலாக டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் அறிவித்துள்ளது.
ரூ.1,700, ரூ.2,500, ரூ.3,500, ரூ.4,000, ரூ.7,500 ஆகிய விலைகளில் டிக்கெட் விற்கப்படும் நிலையில், ஒரு நபருக்கு அதிகபட்சமாக 2 டிக்கெட் மட்டுமே வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை சேப்பாக்கத்தில் நடந்த கடந்த இரண்டு போட்டிகளில் டிக்கெட் எடுக்க 3 லட்சம் பேர் வரை முன்பதிவு செய்ய ஆன்லைனில் காத்திருந்தனர்.
இதனால், சிஎஸ்கே – மும்பை இந்தியன்ஸ், சிஎஸ்கே – பெங்களூரு இடையேயான போட்டிக்கான டிக்கெட்கள் சில நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்தது. இதனால் இந்த போட்டிக்கான டிக்கெட்டும் சிறிது நேரத்திலேயே விற்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எளிதாக பெறுவது எப்படி?
சில நேரங்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் Pre Booking என்று அரைமணிநேரம் முன்னதாக சில ஆயிரம் டிக்கெட்களை ஓபன் செய்கிறது. அப்படி செய்யும்பட்சத்தில் 10.15 மணிக்கு முன்னதாக 9.30 மணிக்கே டிக்கெட் புக்கிங் தொடங்கும். இதனை கவனித்து முன்கூட்டியே புக் செய்யலாம்.
Also Read | “நித்யானந்தா உயிரோடு தான் இருக்கிறார்..” – உயிர் தியாகம் குறித்து கைலாசா விளக்கம்!
இதுதவிர, www.chennaisuperkings.com இணையதளம் மட்டுமில்லாமல் ஜோமோட்டோ நிறுவனத்துக்கு சொந்தமான www.district.in என்ற இணையதளத்திலும் சென்னை போட்டிக்கான டிக்கெட் விற்பனை நடக்கிறது. இதில் டிக்கெட் விற்பனை தொடங்குவதற்கான கவுன்டவுன் உட்பட கொடுக்கப்பட்டுள்ளது. சரியான நேரத்தில் காத்திருக்கும் பட்சத்தில் எளிதாக டிக்கெட் பெற முடியும்.
இதற்கிடையே, ஐபிஎல் தொடரில் இதுவரை 3 போட்டிகளில் பங்கேற்றுள்ள சென்னை அணி, ஒரு போட்டியில் வெற்றியும், இரண்டு போட்டிகளில் தோல்வியும் அடைந்துள்ளது. இதனிடையே, பயிற்சியில் ஈடுபட்டுள்ள சிஎஸ்கே வீரர் ஜடேஜா, ”தண்ணி குடுமா…” என தமிழில் பேசிய வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்துள்ளது. இந்த வீடியோவை பகிர்ந்துள்ள சிஎஸ்கே, ”தளபதியின் Tamil Mode On…” எனப் பதிவிட்டுள்ளது.
Chennai [Madras],Chennai,Tamil Nadu
April 02, 2025 7:33 AM IST