• Login
Friday, May 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

ஐபிஎல் மெகா ஏலத்தில் பங்கேற்கும் “குட்டி” வீரர்… யார் இந்த வைபவ் சூர்யவன்ஷி? – News18 தமிழ்

GenevaTimes by GenevaTimes
November 16, 2024
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
ஐபிஎல் மெகா ஏலத்தில் பங்கேற்கும் “குட்டி” வீரர்… யார் இந்த வைபவ் சூர்யவன்ஷி? – News18 தமிழ்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


அடுத்தாண்டு ஐபிஎல் போட்டிகளில் விளையாட உள்ள வீரர்களுக்கான ஏலத்தில் இடம்பெற்றுள்ள 13 வயது சிறுவன் வைபவ் சூர்யவன்ஷி மிகக் குறைந்த வயதுள்ள கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

204 வீரர்களை தேர்வு செய்ய ஜெட்டா நகரில் நடக்க உள்ளது மெகா ஏலம். இந்த ஏல நிகழ்ச்சியை மல்லிகா சாகர் இந்தாண்டும் தொகுத்து வழங்க இருக்கிறார். 574 பேரில் இருந்து 70 வெளிநாட்டு வீரர்கள் உட்பட 204 வீரர்கள் ஏலத்தில் எடுக்கப்பட இருக்கின்றனர். வீரர்கள் பட்டியலில் 13 வயதான இளம் வீரரான வைபவ் சூர்யவன்ஷியின் பெயரும் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விளம்பரம்

2011 ஆம் ஆண்டு மார்ச் 27 ஆம் தேதி பிறந்தவர் வைபவ். இடதுகை ஆட்டக்காரரான வைபவ், பிகாரைச் சேர்ந்தவர். வைபவ் சூர்யவன்ஷியை பொறுத்தவரை, ஐபிஎல் ஏல வரலாற்றில் பங்கேற்கும் மிக இளம் வயது வீரர் ஆவார். பட்டியலில் 68வது செட்டில் 491வது இடத்தை பிடித்துள்ளார். அன்கேப்ட் வீரராக வகைப்படுத்தப்பட்டுள்ள இவருக்கு அடிப்படை தொகை 30 லட்சம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பிகாரின் தாஜ்பூர் கிராமத்தில் 2011- ஆம் ஆண்டு மார்ச் 27 ஆம் தேதி பிறந்த வைபவ், தனது கிரிக்கெட் பயணத்தை 9 வயதில் தொடங்கினார்.

விளம்பரம்

கிரிக்கெட் மீதான காதல், அவரது தந்தையிடமிருந்து வந்ததாக கூறப்படுகிறது. அவரது தந்தையே தொடக்கத்தில் வைபவுக்கு பயிற்சி தந்து வந்தார். பின்னர் தலைநகர் பாட்னாவுக்கு சென்று முறையான பயிற்சிகளை தொடங்கினார்.

முதலில் 12 வயது சிறுவனாக பிகார் U19 க்கான வினு மங்கட் டிராபியில் விளையாடினார் வைபவ். இடது கை பேட்ஸ்மேனான வைபவின் நிதானம் மற்றும் முதிர்ச்சியான ஆட்டம், கடந்த ஜனவரியில் மும்பைக்கு எதிரான ரஞ்சி டிராபியில் பிகார் அணிக்காக விளையாடும் வாய்ப்பை பெற்று தந்தது. இதன் மூலம், முதல்தர விளையாட்டில் மிக குறைந்த வயதில் அறிமுகம் ஆன வீரர்கள் என்ற அலிமுதீன், யுவராஜ் சிங் ஆகியோரின் சாதனையை முறியடித்தார்.

விளம்பரம்

Also Read | சாம்பியன்ஸ் கோப்பை தொடர் : பாகிஸ்தான் கோரிக்கையை நிராகரித்த ஐசிசி…

பின்னர், கடந்த செப்டம்பர் மாதம், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அண்டர் 19 டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்காக அறிமுகமானார். தனது முதல் சர்வதேச போட்டியில் வெறும் 58 பந்துகளில் சதம் அடைத்தார். 14 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 104 ரன்களில் அவுட் ஆனார். U19 கிரிக்கெட் வரலாற்றில் 2005 இல் மொயீன் அலி 56 பந்துகளில் அடித்த சதத்துக்கு பிறகு பதிவான இரண்டாவது அதிவேக சதம் இதுவாகும்.

விளம்பரம்

13 வயதான சூர்யவன்ஷி, ரஞ்சி போட்டிக்கு பிறகு பேட்டி ஒன்றில் தனது வயது 14 என்று கூறியிருந்தார். இதனால், அவரது அதிகாரப்பூர்வ பிறந்த தேதி குறித்த சர்ச்சைகளும் எழுந்துள்ளன.

.

Read More

Previous Post

நைஜீரியா, பிரேசில், கயானா நாடுகளுக்கு 5 நாள் பயணமாக புறப்பட்டார் பிரதமர் மோடி | PM Narendra Modi departs for 5-day tour of Nigeria, Brazil, Guyana

Next Post

ஆசிய வளர்ச்சியில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கும்: மோர்கன் ஸ்டான்லி ஆய்வில் தகவல் | India will play an important role in Asian development

Next Post
ஆசிய வளர்ச்சியில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கும்: மோர்கன் ஸ்டான்லி ஆய்வில் தகவல் | India will play an important role in Asian development

ஆசிய வளர்ச்சியில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கும்: மோர்கன் ஸ்டான்லி ஆய்வில் தகவல் | India will play an important role in Asian development

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin