Last Updated:
ஏலத்தில் பங்கேற்கும் கொல்கத்தா அணியிடம் 64 கோடியே 30 லட்சம் ரூபாயும், சென்னை அணியிடம் 43 கோடியே 40 லட்சம் ரூபாயும் உள்ளன.
ஐபிஎல் மினி ஏலத்தில் 350 வீரர்கள் பங்கேற்க உள்ள நிலையில், வெங்கடேஸ் ஐயர், டேவிட் மில்லர் உள்ளிட்டோருக்கு அடிப்படை விலையாக 2 கோடி ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அடுத்த ஐபிஎல் சீசனுக்கான மினி ஏலம் வரும் 16 ஆம் தேதி அபுதாபியில் நடைபெற உள்ளது. மினி ஏலத்தில் பங்கேற்க 14 நாடுகளை சேர்ந்த ஆயிரத்து 355 வீரர்கள் பதிவு செய்திருந்த நிலையில், மினி ஏலத்திற்கான இறுதிப் பட்டியலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
இதில், 240 இந்திய வீரர்கள், 110 வெளிநாட்டு வீரர்கள் இடம்பிடித்துள்ளனர். இரண்டு கோடி ரூபாய் அடிப்படை விலையில் கேமரூன் கிரீன், வெங்கடேஷ் ஐயர், மதீஷா பத்திரானா, டேவிட் மில்லர், ரச்சின் ரவீந்தரா, ஸ்டீவ் ஸ்மீத் உட்பட 40 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
ஒன்றரை கோடி ரூபாய் அடிப்படை விலையில் 9 வீரர்களும், ஒரு கோடியே 25 லட்சம் ரூபாய் அடிப்படை விலையில் 4 வீரர்களும், ஒரு கோடி ரூபாய் அடிப்படை விலையில் 17 வீரர்களும் இடம்பெற்றுள்ளனர்.
December 09, 2025 5:48 PM IST


