Last Updated:
ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் சென்னை அணிக்கு மிக மோசமான சீசனாக நடப்பு சீசன் மாறியது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், தற்போது சென்னை அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் தோனி குறித்து வெளிவந்த தகவல்கள் இணையத்தில் கவனம் பெற்றுள்ளன.
ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் சென்னை அணிக்கு மிக மோசமான சீசனாக நடப்பு சீசன் மாறியது. இந்த தொடரில் சென்னை அணி கடைசி இடத்தை பிடித்தது. தொடர் ஆரம்பித்தபோது சென்னை அணியின் கேப்டனாக ருதுராஜ் செயல்பட்டிருந்தார்.
ஆனால் காயம் காரணமாக அவர் விலகி. இதைத் தொடர்ந்து கேப்டன்ஷிப் பொறுப்பை தோனி ஏற்றுக்கொண்டார். நடப்பு ஐபிஎல் தொடரில் 13 இன்னிங்ஸ்களில் விளையாடிய தோனி 196 ரன்கள் எடுத்துள்ளார். அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 135-க்கும் அதிகமாக உள்ளது. இந்தத் தொடரில் 12 பவுண்டரியும், 12 சிக்ஸரும் விளாசியுள்ளார்.
சர்வதேச போட்டிகளில் இருந்து தோனி ஓய்வை அறிவித்தாலும் அவர் இந்திய அணியின் பயிற்சியாளராக தனது விருப்பத்தை இன்னும் அறிவிக்கவில்லை. மேலும் அடுத்த ஐபிஎல் தொடரில் அவர் விளையாடுவார் என்பது உறுதி செய்யப்படவில்லை.
June 30, 2025 2:38 PM IST