ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பெங்களூரு அணிக்காக தொடக்க வீரராக களம் இறங்கி விராட் கோலி இதுவரை 661 ரன்கள் எடுத்துள்ளார். லீக் சுற்றில் இன்னும் ஒரு போட்டி பெங்களூரு அணிக்கு மீதம் உள்ளது.
இந்த நிலையில் உலக கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் விராட் கோலி தொடக்க வீரராக களம் இறங்குவாரா என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது. அவர் ஓபனிங் பேட்ஸ்மேனாக விளையாட வேண்டும் என்று அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மிகவும் விறுவிறுப்பான கட்டத்தை நெருங்கியுள்ளது. அடுத்த சுற்றான ப்ளே ஆப் சுற்றுக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் தகுதி பெற்றுள்ளன.
இன்னும் 3 மற்றும் நான்காவது இடத்திற்கு கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. சென்னை, ஹைதராபாத், பெங்களூரு அணிகளில் 2 அணிகள் மூன்று மற்றும் நான்காவது இடத்தை பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த பரபரப்பான சூழலில் சென்னை சூப்பர் கிங்ஸ் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை வரும் 18ஆம் தேதி எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் தோல்வி அடையும் அணி தொடரிலிருந்து வெளியேறும். இருப்பினும் 18 ரன்கள் வித்தியாசம் அல்லது 18 ஓவர்களில் சென்னை அணியை பெங்களூரு வீழ்த்தாவிட்டால் அந்த அணி தொடரில் இருந்து வெளியேறும் என்பது போன்ற கால்குலேஷன்கள் உள்ளன.
இவற்றைத் தவிர்த்து நடப்பு ஐபிஎல் சீசனில் இதுவரை 13 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள விராட் கோலி 661 ரன்களை குவித்துள்ளார். ஸ்டிரைக் ரேட் 155.16 ஆக உள்ளது.
தொடர்ந்து விராட் கோலி சூப்பர் ஃபார்மில் இருப்பது இந்திய அணிக்கு வலு சேர்க்கிறது. இருப்பினும் இந்திய அணிக்காக விராட் கோலி விளையாடும் போது பெரும்பாலும் மூன்றாவது மற்றும் நான்காவது வீரராக களத்தில் இறங்குகிறார்.
தொடக்க பேட்ஸ்மனாக அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால் அதே நிலையில் உலக கோப்பை கிரிக்கெட் தொடரிலும் விராட் கோலி களம் இறங்க வேண்டும் என்று அவரது ரசிகர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க – இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து விடைபெறும் டிராவிட்
இதற்கிடையே ரோஹித் சர்மாவுடன் தொடக்க வீரராக களம் இறங்கும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் கடந்த சில போட்டிகளாக ரன் குவிக்க தவற வருகிறார். ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நிறைவு பெற்றதும், ஜூன் மாதம் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆரம்பமாக உள்ளது. இதில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு 20 அணிகள் போட்டி போடுகின்றன.
இந்த நிலையில் உலக கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் விராட் கோலி தொடக்க வீரராக களம் இறங்குவாரா என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது.
.
&w=750&resize=750,375&ssl=1)
