• Login
Monday, April 6, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

ஐபிஎல் தொடரில் பங்கேற்ற வெளிநாட்டு வீரர்கள் தாயகம் புறப்பட்டனர் | Foreign players who participated in IPL 2025 season back to home

GenevaTimes by GenevaTimes
May 11, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
ஐபிஎல் தொடரில் பங்கேற்ற வெளிநாட்டு வீரர்கள் தாயகம் புறப்பட்டனர் | Foreign players who participated in IPL 2025 season back to home
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மும்பை: இந்​தி​யா, பாகிஸ்​தான் இடையே போர் பதற்​றம் நில​வியதை தொடர்ந்து கடந்த 8-ம் தேதி ஐபிஎல் தொடர் பாதி​யிலேயே நிறுத்​தப்​பட்​டது. அன்​றைய தினம் பஞ்​சாப் – டெல்லி அணி​கள் இடையி​லான ஆட்​டம் தரம்​சாலா​வில் நடை​பெற்று கொண்​டிருந்​தது. 10.1 ஓவர்​களில் இந்த ஆட்​டம் நிறுத்​தப்​பட்டு மைதானத்​தில் இருந்த ரசிகர்​கள் பாது​காப்​பாக வெளி​யேற்​றப்​பட்​டனர்.

நாட்​டின் பல்​வேறு பகு​தி​களில் விமான நிலை​யங்​கள் மூடப்​பட்​டிருந்​த​தால் பஞ்​சாப், டெல்லி கிரிக்​கெட் அணி வீரர்​கள் மற்​றும் போட்டி ஒளிபரப்பு குழு​வினர் உட்பட சுமார் 300 பேர் சிறப்பு வந்தே பாரத் மூலம் தரம்​சாலா​வில் இருந்து டெல்​லிக்கு அழைத்து வரப்​பட்​டனர்.

இதைத் தொடர்ந்து ஐபிஎல் தொடர் ஒரு​வார காலத்​துக்கு நிறுத்தி வைக்​கப்​படு​வ​தாக பிசிசிஐ அறி​வித்​தது. இதையடுத்து ஐபிஎல் தொடரில் அனைத்து அணி​களி​லும் இடம் பெற்​றிருந்த வெளி​நாட்டு வீரர்​களை பாது​காப்​பாக அவர்​களது தாயகத்​துக்கு அனுப்பி வைக்​கும் பணி​கள் மேற்​கொள்​ளப்​பட்​டன. மேலும் இந்​திய வீரர்​கள் தங்​களது நகரங்​களுக்கு சென்​றடைய​வும் நடவடிக்கை எடுக்​கப்​பட்​டது.

இதன் ஒரு கட்​ட​மாக பெங்​களூரு அணி​யில் இடம் பெற்​றிருந்த ஜோஷ் ஹேசில்​வுட், ரொமாரியோ ஷெப்​பர்​டு, லியாம் லிவிங்​ஸ்​டன், பில் சால்ட், ஜேக்​கப் பெத்​தேல், டிம் டேவிட், நூவன் துஷா​ரா, லுங்கி நிகிடி ஆகிய 8 வெளி​நாட்டு வீரர்கள் நேற்று பெங்​களூரு​வில் இருந்து தங்​களது நாட்​டுக்கு புறப்​பட்​டுச் சென்​றனர்.

இதே​போன்று லக்​னோ, மும்​பை, கொல்​கத்தா அணி​களில் இடம் பெற்​றிருந்த வெளி​நாட்டு வீரர்​களும் தாயகம் புறப்​பட்​டு சென்​றுள்​ளனர். இதை அந்த அணி​கள் உறுதி செய்​துள்​ளன. போட்​டி​யில் பங்​கேற்​ப​தற்​காக ஹைத​ரா​பாத் சென்​றிருந்த கொல்​கத்தா அணி வீரர்​கள் கொல்​கத்​தாவுக்கு திரும்​பி​யுள்​ளனர்.

இதற்​கிடையே பாது​காப்பு காரணங்​களை கருதி ஐபிஎல் தொடரின் எஞ்​சிய 16 ஆட்​டங்​களை பெங்​களூரு, சென்​னை, ஹைத​ரா​பாத் ஆகிய நகரங்​களில் நடத்தி முடிப்​ப​தற்​கான நடவடிக்​கையை பிசிசிஐ முன்​னெடுத்​தது. இந்​நிலை​யில் நேற்று மாலை 5 மணி அளவில் இந்​தி​யா, பாகிஸ்​தான் இடையே போர் நிறுத்த அறி​விப்பு வெளி​யானது. இதைத் தொடர்ந்து இரு நாட்டு எல்லை பகு​தி​யிலும் அமைதி திரும்பி வரு​கிறது.

இந்​நிலை​யில், போர் நிறுத்​தம் ஏற்​பட்​டதை தொடர்ந்து ஐபிஎல் தொடரை மீண்​டும் நடத்​து​வது குறித்து பிசிசிஐ விரை​வில் ஆலோ​சனை கூட்​டம் நடத்​தக்​கூடும் என தகவல்​கள் வெளி​யாகி உள்​ளன. ஐபிஎல் அட்​ட​வணை​யின் படி மே 25-ம் தேதிக்​குள் தொடர் நடத்தி முடிக்​கப்பட வேண்​டும். இந்த வகை​யில் அடுத்த 5 முதல் 6 நாட்​களுக்​குள் போட்​டிகள் மீண்​டும் தொடங்​கு​வதற்​கான வாய்ப்பு உள்​ள​தாக உறு​தி செய்​யப்​ப​டாத தகவல்​கள்​ தெரிவிக்​கின்​றன.



Read More

Previous Post

“தாக்குதலை நிறுத்தினாலும் இது நிச்சயம் தொடரும்…” – அமைச்சர் ஜெய்சங்கர் உறுதி

Next Post

பாகிஸ்தானில் ஒரு இந்திய ரூபாயை கொடுத்தால் எவ்வளவு கிடைக்கும் தெரியுமா?

Next Post
பாகிஸ்தானில் ஒரு இந்திய ரூபாயை கொடுத்தால் எவ்வளவு கிடைக்கும் தெரியுமா?

பாகிஸ்தானில் ஒரு இந்திய ரூபாயை கொடுத்தால் எவ்வளவு கிடைக்கும் தெரியுமா?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin