Last Updated:
வங்கதேசத்தில் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறையால், பிசிசிஐ அறிவுறுத்தலின்படி முஸ்தஃபிஜூர் ரஹ்மான் ஐபிஎல் 2026 தொடரில் இருந்து நீக்கப்பட்டார்.
வங்கதேசத்தில் ஏற்பட்டுள்ள கலவரத்தில் இந்துக்கள் மீதான தாக்குதல் நடத்தப்படும் சூழலில் ஐபிஎல் தொடரில் இருந்து வங்கசேத வீரர் முஸ்தஃபிஷூர் ரகுமானை நீக்க பிசிசிஐ அறிவுறுத்தி உள்ளது.
அண்டை நாடான வங்கதேசத்தில் சிறுபான்மையினருக்கு எதிராக வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இந்து மதத்தைச் சேர்ந்த தீபு சந்திர தாஸ் என்ற இளைஞரை மரத்தில் தலைக்கீழாக தொங்கவிட்டு, உயிருடன் எரித்து கொன்ற சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், ராஜ்பாரி மாவட்டத்தைச் சேர்ந்த அம்ரித் மண்டல் என்பவரையும் வன்முறை கும்பல் அடித்துக் கொன்றது.
இதனிடையே கடந்த சில நாட்களுக்கு மேலும் ஒரு இந்து தொழிலதிபர் வீடும் திரும்பும் போது எரித்து கொலை செய்யப்பட்டார். வங்கதேசத்தில் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை சம்பவங்களுக்கு இந்தியா மட்டுமின்றி சர்வதேச மனித உரிமைகள் அமைப்பும் கண்டனம் தெரிவித்தது.
இந்நிலையில், ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் வங்கதேச வீரர்களை அனுமதிக்கக் கூடாது என்று ஹரியானாவை சேர்ந்த சிவசேனா நிர்வாகிகள் எச்சரித்து இருந்தனர். ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் வரும் மார்ச் மாதம் தொடங்கலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், ஹாரியானாவை சேர்ந்த சிவசேனா நிர்வாகிகள் மற்றும் சில அமைப்பினர் வங்கதேச வீரர்களுக்கு எதிராக போர்க்கொடி ஏந்தியதால் சர்ச்சை வெடித்தது.
இந்நிலையில் ஐபிஎல் தொடரில் இருந்து வங்கசேத வீரர் முஸ்தஃபிஷூர் ரகுமானை நீக்க கொல்கத்தா அணி நிர்வாகத்திற்கு பிசிசிஐ அறிவுறுத்தி உள்ளது. முஸ்தஃபிஷூர் ரகுமானுக்கு பதிலாக வேறொரு வீரரை நியமனம் செய்யவும் பரிந்துரைத்துள்ளது.
ஐபிஎல் 2026 தொடரை பொறுத்தவரையில் ஒரே ஒரு வங்கதேச வீரர் மட்டுமே ஏலத்தில் எடுக்கப்பட்டார். வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் முஸ்தஃபிஜூர் ரஹ்மானை கொல்கத்தா அணி ரூ.9.20 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. துபாயில் நடைபெற்ற ஐபிஎல் 2026 தொடருக்கான ஏலத்தில் அதிக தொகைக்கு ஏலம் போன வீரர்களில் முஸ்தஃபிஜூர் ரஹ்மானும் ஒருவர் என்பது குறிப்பிடதக்கது.
Jan 03, 2026 12:11 PM IST


