- 2018 சீசனில் அணியின் கேப்டனாக கேன் வில்லியம்சன் நியமிக்கப்பட்டார். இந்த சீசனில் இரண்டாவது முறையாக இறுதிப்போட்டி வரை முன்னேறியது. பைனலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக தோல்வியை தழுவி ரன்னர் அப் ஆனது
- 2019 சீசனில் வில்லியம்சன் கேப்டன்சியை தொடர , 14 போட்டிகளில் 6இல் மட்டும் வெற்றி பெற்றிருந்தாலும் ரன் ரேட் அடிப்படையில் ப்ளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது. பின்னர் எலிமினேட்டர் போட்டியில் தோல்வியை தழுவி வெளியேறியது
- 2020 சீசனில் அணியின் கேப்டனாக மீண்டும் டேவிட் வார்னர் நியமிக்கப்பட்டார். இந்த சீசனில் 7 வெற்றிகளை பெற்று ப்ளேஆஃப்புக்கு தகுதி பெற்ற சன் ரைசர்ஸ் குவாலிபயர் 2 போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக தோல்வியை தழுவியது
- 2021 சீசனில் அணியின் கேப்டனாக டேவிட் வார்னர் செயல்பட்டார்.14 போட்டிகளில் 3இல் மட்டுமே வெற்றி பெற்ற சன் ரைசர்ஸ புள்ளிப்பட்டியலில்ல கடைசி இடத்தை பிடித்தது. இந்த சீசனில் ஒரேயொரு போட்டியில் மட்டும் மனீஷ் பாண்டே கேப்டன்சி செய்தார்.
- 2022 சீசனில் புதிய அணி உருவாக்கப்பட்டு, அணியின் கேப்டனாக புவனேஷ்வர் குமார் செயல்பட்டார். ஆரம்பத்தில் சில போட்டிகளில் ஷிகர் தவான் கேப்டனாக செயல்பட்டார். 14 போட்டிகளில் 6இல் வெற்றி பெற்ற சன் ரைசர்ஸ் 8வது இடத்தை பிடித்தது
- 2023 சீசனில் அணியின் கேப்டனாக ஐடன் மார்க்ரம் நியமிக்கப்பட்டார். 14 போட்டிகளில் 4இல் மட்டும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தை பிடித்தது
- 2024 சீசனில் ஆஸ்திரேலியா வீரர் பேட் கம்மின்ஸ் கேப்டனாக நியமிக்கப்பட்டார். மூன்றாவது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறிய சன் சைர்ஸ் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக தோல்வியை தழுவி மூன்றாவது முறையாக ரன்னர் அப் ஆகியுள்ளது
சன் ரைசர்ஸ் கேப்டன்கள்
சன் ரைசர்ஸ் அணி ஷிகர் தவான், டேவிட் வார்னர், கேன் வில்லியம்சன், ஐடன் மார்க்ரம், பேட் கம்மின்ஸ் முழு நேர கேப்டன்களாகவும் புவனேஷ்வர் குமார், டேரன் சம்மி, குமார சங்ககாரா, கேமரூன் ஒய்ட், மனீஷ் பாண்டே ஆகியோர் பகுதி நேர கேப்டன்களாக விளையாடியுள்ளனர்.

