Last Updated:
முடிவு எப்படி அமைந்தாலும் அது மனதுக்கு வேதனையை கொடுக்கும்
ஐபிஎல் தொடரை வெல்வதற்கு எந்த அணிக்கு தகுதி உள்ளது என்பது குறித்து இந்தியாவின் முன்னணி இயக்குனரான ராஜமௌலி வெளியிட்டுள்ள பதிவு சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி நாளை நடைபெற உள்ளது. அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி விளையாட உள்ளது. இரு அணிகளும் சம பலம் வாய்ந்தவை என்பதால் போட்டி மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது.
பஞ்சாப் அணி தரப்பில் ஷ்ரேயாஸ் ஐயர் இந்தத் தொடர் முழுவதுமே மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்களின் அன்பையும் ஆதரவையும் பெற்றுள்ளார். பெங்களூரு அணியில் விராட் கோலி 17 ஆண்டுகளாக விளையாடிய போதும் அந்த அணி ஒருமுறை கூட கோப்பையை வெல்லவில்லை. 18 ஆவது ஐபிஎல் தொடரில் களம் காணும் விராட் கோலியின் ஆர்.சி.பி அணி வெற்றி பெறுமா என்ற எதிர்பார்ப்பும் அதிகம் காணப்படுகிறது.
இந்த நிலையில் இறுதிப் போட்டி குறித்து இந்தியாவின் முன்னணி இயக்குனரான ராஜமௌலி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது, “மும்பை அணியில் பும்ரா, போல்ட் வீசிய யார்க்கர்களை தேர்ட் மேன் திசையில் அற்புதமாக ஸ்ரேயாஸ் அய்யர் பவுண்டரிக்கு அனுப்பினார். டெல்லியை கோப்பை வெல்ல வைத்த ஸ்ரேயாஸ் அய்யர் அதன் பின்னர் அந்த அணியில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
அவர் தலைமை வகித்த கொல்கத்தா அணி கோப்பையை வென்ற அடுத்த தொடரில் அவர் அதனை விட்டு வெளியேறினார். பஞ்சாப் அணியை 11 ஆண்டுகளுக்குப் பிறகு இறுதிப் போட்டிக்கு ஷ்ரேயாஸ் ஐயர் கொண்டு சென்றுள்ளார். அவர் கோப்பையை வெல்லத் தகுதியானவர்.
Iyer guiding Bumrah’s and Boult’s yorkers to the third man boundary… Exquisite…
This man leads Delhi to a final… and is dropped…
Leads Kolkata to a trophy… dropped…
Leads a young Punjab to the finals after 11 years.
He deserves this year’s trophy too…On the other hand,… pic.twitter.com/ws0anhcZ3l
— rajamouli ss (@ssrajamouli) June 2, 2025
இன்னொரு பக்கம் விராட் கோலி இந்தத் தொடர் முழுவதுமே சிறப்பாக விளையாடி உள்ளார். அவரும் கோப்பையை வெல்லத் தகுதியானவர். எனவே முடிவு எப்படி அமைந்தாலும் அது மனதுக்கு வேதனையை கொடுக்கும்” என்று ராஜமௌலி கூறியுள்ளார். தற்போது இந்தப் பதிவு எக்ஸ் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
June 02, 2025 6:45 PM IST


