• Login
Sunday, April 12, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

ஐபிஎல்லில் இருந்து விலகிய பின் ரசிகர்களுக்கு ருதுராஜ் மெசேஜ்.. தோனி குறித்து சொன்னது என்ன?

GenevaTimes by GenevaTimes
April 11, 2025
in விளையாட்டு
Reading Time: 2 mins read
0
ஐபிஎல்லில் இருந்து விலகிய பின் ரசிகர்களுக்கு ருதுராஜ் மெசேஜ்.. தோனி குறித்து சொன்னது என்ன?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:April 11, 2025 9:20 AM IST

சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் முழங்கை எலும்பு முறிவு காரணமாக நடப்பு தொடரிலிருந்து விலகியதாக அணியின் பயிற்சியாளர் பிளெம்மிங் தெரிவித்தார். இதனால் சென்னை அணிக்கு மீண்டும் கேப்டனாகி உள்ளார் எம்.எஸ்.தோனி.

News18News18
News18

நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் விலகியுள்ள நிலையில், அது ஏன் என்பதை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

காயம் காரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறிய நிலையில், மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார் எம்.எஸ்.தோனி. நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடிய 5 போட்டிகளில் 4 போட்டியில் சிஎஸ்கே அணி தோல்வியை சந்தித்துள்ளது. இந்த நிலையில் சென்னை ரசிகர்கள் கடும் அதிருப்தியில் இருந்தனர். இந்த நிலையில், சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் முழங்கை எலும்பு முறிவு காரணமாக நடப்பு தொடரிலிருந்து விலகியதாக அணியின் பயிற்சியாளர் பிளெம்மிங் தெரிவித்தார். இதனால் சென்னை அணிக்கு மீண்டும் கேப்டனாகி உள்ளார் எம்.எஸ்.தோனி.

இந்நிலையில், அணியில் இருந்து விலகும் முன் ருதுராஜ் கெய்க்வாட் ரசிகர்களுக்காக வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், “எதிர்பாரா விதமாக உண்டான காயத்தால் மீதமுள்ள போட்டிகளில் ஆட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சிஎஸ்கேவுக்காக ஆட முடியாதது வருத்தம்தான். இதுவரை நீங்கள் அளித்த ஆதரவுக்கு நன்றி. சில போட்டிகளில் சிஎஸ்கே தடுமாற்றத்துடன் செயல்பட்டிருக்கிறது.

Also Read | பிருத்வி ஷா முதல் மயங்க் அகர்வால் வரை..! சென்னை அணியில் ருதுராஜ் கெய்க்வாடுக்கு பதில் யார் இணைவார்..?

ஆனால், தற்போது ஒரு இளம் விக்கெட் கீப்பர் அணியை வழிநடத்தவிருக்கிறார். அதனால், எல்லாம் மாறும் என நம்புவோம். இப்படியான சூழ்நிலையில் இருந்து அணியை கட்டாயம் மீட்க வேண்டுமென நினைத்தேன். ஆனால், விஷயங்கள் நமது கட்டுப்பாட்டில் இல்லை. தற்போது தொடரில் இருந்து விலகினாலும், அணிக்கு தொடர்ந்து ஆதரவளிக்கும் வகையில் இங்கே தொடர்ந்து இருக்க விரும்புகிறேன். டக் அவுட்டிலிருந்து அணிக்கு ஆதரவளிக்க காத்திருக்கிறேன்.” என்றார்.

Location :

Chennai [Madras],Chennai,Tamil Nadu

First Published :

April 11, 2025 9:20 AM IST

Read More

Previous Post

Tamil Live Breaking News : 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்

Next Post

வரலாறு காணாத புதிய உச்சம்: தங்கம் விலை பவுன் ரூ.70,000-ஐ நெருங்கியது! | Gold rate reaches new record high in Chennai

Next Post
வரலாறு காணாத புதிய உச்சம்: தங்கம் விலை பவுன் ரூ.70,000-ஐ நெருங்கியது! | Gold rate reaches new record high in Chennai

வரலாறு காணாத புதிய உச்சம்: தங்கம் விலை பவுன் ரூ.70,000-ஐ நெருங்கியது! | Gold rate reaches new record high in Chennai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin