Last Updated:
இம்பேக்ட் பிளேயராக தற்போது அணி நிர்வாகம் ஒரு குறிப்பிட்ட பேட்டர் அல்லது பந்துவீச்சாளரை மட்டும் தேர்ந்தெடுப்பதாகவும், ஒரு ஆல்-ரவுண்டரை எதற்கு தேர்வு செய்ய வேண்டும் என்று கேட்பதாகவும் அக்சர் படேல் கருத்து தெரிவித்தார்.
ஐபிஎல்லில் பின்பற்றப்படும் ‘இம்பேக்ட் பிளேயர்’ விதி தனக்கு பிடிக்கவில்லை என்று டெல்லி கேபிடல்ஸ் அணி கேப்டன் அக்சர் படேல் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அக்சர் படேல், பிடிக்கவில்லை என்றாலும் விதிகளை நாம் பின்பற்ற வேண்டிய அவசியம் உள்ளது என்றும் கூறினார். இம்பேக்ட் பிளேயராக தற்போது அணி நிர்வாகம் ஒரு குறிப்பிட்ட பேட்டர் அல்லது பந்துவீச்சாளரை மட்டும் தேர்ந்தெடுப்பதாகவும், ஒரு ஆல்-ரவுண்டரை எதற்கு தேர்வு செய்ய வேண்டும் என்று கேட்பதாகவும் அக்சர் படேல் கருத்து தெரிவித்தார்.
“உண்மையைச் சொல்லப்போனால், எனக்கு இந்த விதி பிடிக்கவில்லை” என்று அக்சர் படேல் சிரித்துக்கொண்டே கூறினார். அவர் ஒரு ஆல்-ரவுண்டர் என்பதால், இந்த விதி ஆல்-ரவுண்டர்களின் முக்கியத்துவத்தைக் குறைப்பதாகக் கருதுகிறார்.
மேலும் பேசிய அக்சர் படேல், “இதற்கு முன்பு ஒரு ஆல்-ரவுண்டரை பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிற்கும் சேர்த்துத் தேர்ந்தெடுப்பார்கள். ஆனால் இந்த விதியால், அணிகள் ஒரு முழுநேர பேட்டர் அல்லது பந்துவீச்சாளரைத் தேர்வு செய்கின்றன. இதனால் ஒரு ஆல்-ரவுண்டர் நமக்கு ஏன் தேவை? என்ற எண்ணம் அணி நிர்வாகத்திற்கு வந்துவிடுகிறது. இருப்பினும், விதிகள் என்று வரும்போது அவற்றைப் பின்பற்றித்தான் ஆகவேண்டும். எனினும் தனிப்பட்ட ரீதியில் எனக்கு இது பிடிக்கவில்லை” என்று வெளிப்படையாக பேசினார்.
இந்நிலையில், அகமதாபாத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சர்வதேச கிரிக்கெட்டில் 2025 ஆம் ஆண்டில் சிறப்பாக செயல்பட்ட இந்திய அணியின் கேப்டன் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணி கேப்டனான ஷுப்மன் கில் கவுரவிக்கப்பட்டார். அதன்பின் குஜராத் டைட்டன்ஸ் அணி வீரர்கள் அனைவரும் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
Chennai [Madras],Chennai,Tamil Nadu


